இரவீந்திர கௌசிக் | |
---|---|
பிறப்பு | சிறீ கங்காநகர், இராசத்தான், இந்தியா | 26 சூலை 1952
இறப்பு | 26 சூலை 1999 மியான்வாலி மத்தியச் சிறைச்சாலை, பாக்கித்தான் | (அகவை 47)
தேசியம் | இந்தியர் |
இரவீந்திர கௌசிக் (Ravindra Kaushik) (11 ஏப்ரல் 1952 – 21 நவம்பர் 2001), இந்தியாவின் வெளிநாட்டு உளவு நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பிற்காக பாகிஸ்தான் நாட்டில் தங்கி 1975ஆம் ஆண்டு முதல் உளவு வேலை செய்த போது 1983ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக பாகிஸ்தானின் மியான்வாலி மத்திய சிறையில் சாகும் வரை இருந்தார்.
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் கரும்புலி என அழைக்கப்பட்ட இரவீந்திர கௌசிக்[1], இந்தியாவில் பிரபலமான உளவாளிகளில் ஒருவராவர்.[2] ரவீந்திர கௌசிக் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் சிறீ கங்காநகர் நகரத்தில் பிறந்தவர். இவர் பாகிஸ்தான் நாட்டில் புகுந்து, பாகிஸ்தான் இராணுவத்தில் இளம் அதிகாரியாக சேர்ந்து படிப்படியாக மேஜர் பதவி வகித்தார்.[3][4]
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பில், இரவீந்திர கௌசிக் வெளிநாட்டு உளவுப் பணியில் சேர்வதற்கு முன்னர், ஏற்கனவே பஞ்சாபி மொழி [5]தெரிந்த இரவீந்திர கௌசிக்கை ஒரு இசுலாமியராக வாழ, வழிபட உருது மொழி பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் சுன்னத் செய்து கொண்டு, திருக்குர்ஆன் நூலை முழுவதுமாக படித்து தேர்ந்தார்.
தனது 23வது அகவையில் இரவீந்திர கௌசிக் 1975ஆம் ஆண்டில் பாகிஸ்தான் நாட்டிற்கு நபி அகமது ஜாகீர் என்ற பெயரில் முஸ்லீமாகச் சென்றார். பின் கராச்சிப் பல்கலைக் கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பு முடித்தார். பின் பாகிஸ்தான் இராணுவத்தில் ஒரு செகண்ட் லெப்டினண்ட் எனும் இளம் அதிகாரியாக பணியில் சேர்ந்து, மேஜர் பதவி வரை பதவியுயர்வு பெற்றார்.[6] இரவீந்திர கௌசிக் அமானாத் எனும் முஸ்லீம் பெண்ணை மணந்தார். [5][7]பாகிஸ்தான் இராணுவத்தில் பணிபுரிந்து கொண்டே கௌசிக் 1979 முதல் 1983 முடிய இந்தியாவிற்கு இராணுவ உளவு தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்.
செப்டம்பர் 1983ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு, இரவீந்திர கௌசிக்கை தொடர்பு கொள்ள இனியாத் மாசிக் என்பவரை பாகிஸ்தானிற்கு அனுப்பியது. இனியாத் மாசிக் பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பால் கைது செய்யப்பட்டு, விசாரிக்கையில், பாகிஸ்தான் இராணுவத்தில் ரவீந்திர கௌசிக் பணிபுரிவது பற்றிய செய்தி வெளியானது.[2] சியால்கோட் நீதிமன்ற விசாரணை முடிவில் 1985ஆம் ஆண்டில் இரவீந்திர கௌசிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பின் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கௌசிற்கு ஆயுள் தண்டனை விதித்தது. 16 ஆண்டுகள் பல சிறைகளில் அடைக்கப்பட்டார். [5]
நவம்பர் 2011ல் நுரையீரல் தொற்று மற்றும் இருதய நோய்களால் மியான்வாலி மத்தியச் சிறையில் ரவீந்திர கௌசிக் காலமானார்.[2]
இரவீந்திர கௌசிக்கின் வாழ்க்கை மையமாகக் கொண்டு 2012ஆம் ஆண்டில் ஏக் தா டைகர் எனும் திரைப்படம் வெளியானது.[8]
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)