இரவீந்திர நரேன் சிங் Rabindra Narain Singh | |
---|---|
பிறப்பு | பாட்னா, பீகார், இந்தியா |
பணி | எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் |
அறியப்படுவது | எலும்பியல் சிகிச்சை |
விருதுகள் | பத்மசிறீ |
இரவீந்திர நரேன் சிங் (Rabindra Narain Singh) என்பவர் ஓர் இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார்.[1][2] 2006-07 ஆம் ஆண்டில் இவர் பீகார் எலும்பியல் சங்கத்தின் தலைவராக இருந்தார்.[3] பாட்னாவிலுள்ள அனூப் நினைவு எலும்பியல் மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கவுரவ ஆலோசகராக சிங் பொறுப்பு வகித்தார்.[4] மேலும் இந்நிறுவனத்தில் அமைந்துள்ள அனூப் எலும்பியல் நிறுவனம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் இயக்குனராகவும் பணிபுரிந்தார்.[5][6] எடின்பரோவின் ராயல் அறுவை சிகிச்சைக் கல்லூரியில் சக உறுப்பினராகவும் இந்திய மருத்துவ கழகத்தின் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் ஓர் உறுப்பினராகவும் சிங் இருந்தார். பாட்னாவில் அமைந்திருந்த அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக நிறுவன நெறிமுறைக் குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்தார்.[7] இவற்றைத் தவிர இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பீகார் கிளையின் தற்காலிக குழு உறுப்பினர் [8] மற்றும் இந்திய கால் மற்றும் கணுக்கால் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் [9] போன்ற பல பொறுப்புகளில் சிங் இருந்தார். இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை மருத்துவ அறிவியலில் சிங்கின் சிறந்த பங்களிப்புகளுக்காக 2010 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு வழங்கியது. [10]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)