இராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயசுவாமி கோயில் | |
---|---|
கோயிலின் கோபுரம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கருநாடகம் |
மாவட்டம்: | பெங்களூரு நகர மாவட்டம் |
அமைவு: | ஜெயநகர், பெங்களூர் |
ஆள்கூறுகள்: | 12°54′51″N 77°35′36″E / 12.91424°N 77.59320°E |
கோயில் தகவல்கள் | |
தீர்த்தம்: | Pushkarni |
வரலாறு | |
கோயில் அறக்கட்டளை: | இராகிகுட்டா ஆஞ்சநேயசுவாமி பக்த ம்ணடலி அறக்கட்டளை |
இணையதளம்: | Ragigudda |
'இராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயசுவாமி கோயில் (Ragigudda Anjaneya Temple) , பொதுவாக இராகிகுடா கோயில்' அல்லது இராகிகுடா ஆஞ்சநேய கோயில் என்றும் குறிப்பிடப்படும் இது[1] அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், பெங்களூருவின் ஜெயநகர் புறநகர்ப் பகுதியில் உள்ளது. இக்கோயிலில் இராமன், சீதா தேவி, இலட்சுமணன் மற்றும் [2] முக்கிய கடவுளான சிவலிங்கமும் இதே வளாகத்தில் உள்ளது. கோவில் ஒரு குன்றின் மேல் உள்ளது. மலையின் அடிவாரத்தில் விநாயகர், நவகிரகங்கள் மற்றும் ராஜராஜேஸ்வரி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய கோயிலும் உள்ளது. கோவிலின் பக்கத்தில் உள்ள பெரிய பாறைகளில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் பொறிக்கப்பட்ட ஒரே சந்நிதியைக் கொண்டுள்ளது. [3] The temple[4]
தற்போது பெங்களூரின் நம்ம மெட்ரோ பணிகள் கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடு மெட்ரோ ரயில் நிலையமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. [5]
கோயிலின் முக்கிய தெய்வமான ஆஞ்சநேய சுவாமியின் சிலை தினை அல்லது கேழ்வரகு (இராகி) குவியலில் இருந்து குட்டா என்றால் குன்று என்று பொருள். எனவே "இராகிகுட்டா" என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் உள்ளூர் தலைவரின் மனைவியான சுதர்மா என்ற ஒரு பக்தியுள்ள பெண்ணால் இது உருவாக்கப்பட்டதென ஒரு கதை கூறப்படுகிறது அவளிடத்தில் ஒரு நாள் மும்மூர்த்திகள் நாடோடிகள் வடிவில் வந்து பிச்சை கேட்கிறார்கள். புதிதாக அறுவடை செய்த கேழ்வரகு (ராகி) தானியத்தை அவர்களுக்குக் கொடுக்கிறாள். அவளுடைய மாமியார் இதை ஏற்கவில்லை. அதைத் திரும்பப் பெற விரும்புகிறார். இது ஒரு புனிதமற்ற செயல் என்பதால், நாடோடிகள்கள் பிச்சையை வாங்க விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் இராகி ஒரு மலையாக மாறுகிறது. இறுதியில், மும்மூர்த்திகள் அவளது தன்னலமற்ற நடத்தையால் மகிழ்ச்சியடைந்து, அவளுக்கு அவர்களின் புனித தரிசனத்தை வழங்குகிறார்கள். மும்மூர்த்திகள் குன்றின் அருகே தங்குவதற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்தினர். மேலும், தங்களை அருகிலுள்ள கற்களாக மாற்றிக்கொண்டனர். இந்த மூன்று கற்களும் இப்போது மும்மூர்த்திகளின் உருவங்களைத் தாங்கி நிற்கின்றன. [6]
இக்கோயில் 1969 இல் உருவாக்கப்பட்டு 1972-இல் [7] பதிவு செய்யப்பட்டது.
கடந்த தசாப்தங்களாக, இந்த கோயில் இந்த வட்டாரத்தில் சமூக மையமாக மாறியுள்ளது. கோயிலைச் சுற்றிலும் வசதியற்றவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் வழங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தைக் கொண்டுள்ளது. [3]
ஒவ்வொரு ஆண்டும் திசம்பரில், 35,000 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் விழாக்களில் கலந்து கொள்ளும் அனுமன் ஜெயந்தி 12 நாள் விழாவாக கோயிலில் கொண்டாடப்படுகிறது. ஏராளமான யாகங்கள், அபிசேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. [6] கோயில் அதன் பக்தர்களை பல்வேறு நடவடிக்கைகளில் தன்னார்வலர்களாக பணியாற்ற அனுமதிக்கிறது. கூட்டத்தை நிர்வகிப்பது முதல் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது வரை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். [8]
காலை: 8.00 மணி முதல் 11.30 மணி வரை
மாலை: 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
காலை: 8.00 முதல் மதியம் 12.30 வரை
மாலை: 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
சனிக்கிழமை காலை:11:00 முதல் 11:30 வரை & இரவு 8:00 முதல் 8:30 வரை