புலனாய்வு அமைப்பு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1 மார்ச்சு 2002 |
ஆட்சி எல்லை | ![]() |
தலைமையகம் | அமைச்சரவை செயலகம், புது தில்லி |
குறிக்கோள் | தனக்கு முன் சேவை (Service Before Self) |
பணியாட்கள் | வகைப்படுத்தப்பட்டது. |
ஆண்டு நிதி | வகைப்படுத்தப்பட்டது. |
அமைச்சர் | |
புலனாய்வு அமைப்பு தலைமை |
|
மூல நிறுவனம் | ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை |
பாதுகாப்பு புலனாய்வு முகமை (Defence Intelligence Agency (DIA), இந்தியப் பாதுகாப்பு படைகள் இடையே இராணுவப் புலனாய்வுப் பணிகளை ஒருங்கிணைக்கும் முகமை ஆகும். [1][2]
இம்முகமை மார்ச் 2002ல் நிறுவப்பட்டது. இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ்[2] ஒரு லெப்டிண்ட் ஜெனரல் தலைமையில் இயங்குகிறது.
முப்படைகளின் தனித்தனி புலனாய்வு அமைப்புகளின் மூத்த அதிகாரிகளால் இம்முகமை 1 மார்ச் 2022 அன்று நிறுவப்பட்டது.
பாதுகாப்பு புலனாய்வு முகமை உருவாக்கப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் ஆயுதப்படைகளின் இராணுவ புலனாய்வு பிரிவுகள் மற்றும் சேவைகளின் தனி உளவுப் பிரிவுகள் மட்டுமே இருந்தது. பின்னர் ரா எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு மற்றும் இந்திய உளவுத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளுடன் பாதுகாப்பு புலனாய்வு முகமை செயல்பட்டது.
வான்படை நுண்ணறிவு இயக்குநரகம், கடற்படை உளவுத்துறை இயக்குநரகம் மற்றும் இராணுவ உளவுத்துறை இயக்குனரங்கள் இந்த முகமையின் கீழ் செயல்படுகிறது.[3]