இராசகோபாலன் இராதாகிருட்டிணன் | |
---|---|
பிறப்பு | சீர்காழி, தமிழ்நாடு | 28 அக்டோபர் 1949
காலம் | 21 ஆம் நூற்றாண்டு தத்துவம் |
பகுதி | மேற்கத்திய தத்துவம் |
பள்ளி | பின்காலனித்துவம், பின்நவீனத்துவம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | டயஸ்போரிக் கலப்பு உலகளாவிய சீரற்ற தன்மை |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
இரா. இராதாகிருட்டிணன் (R. Radhakrishnan) என்று பொதுவாக அழைக்கப்படும் இராசகோபாலன் இராதாகிருட்டிணன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள இர்வின் நகரில் அமைந்துள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் ஒப்பீட்டு இலக்கியப் பாடங்களின் வேந்தர் நிலையிலான பேராசிரியராகப் பணிபுரிகிறார்.[1] [2]
1949ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 அன்று இவர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சீர்காழி என்ற கிராமத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் சென்னையில் கல்வி கற்ற இவர் பின் நியூயார்க் நகரத்திலுள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]
அமெரிக்காவில் இராதாகிருட்டிணன் ஒரு முன்னணி பின்காலனித்துவ கோட்பாட்டாளரா௧வும் இலக்கிய விமர்சகரா௧வும் கருதப்படுகிறார். மேலும் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளரா௧வும், கவிஞராகவும், ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய விமர்சனங்களில் தேர்ச்சி பெற்ற விமர்சகராகவும் விளங்குகிறார்.