இருப்பு அருவி | |
---|---|
பருவமழை காலத்துக்கு முந்தைய தோற்றம் | |
அமைவிடம் | குடகு மாவட்டம், கருநாடகம், இந்தியா |
ஆள்கூறு | 11°58′2.22″N 75°59′1.56″E / 11.9672833°N 75.9837667°E |
மொத்த உயரம் | 170 ft |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீர்வழி | இலட்சுமண தீர்த்த ஆறு |
இருப்பு நீர்வீழ்ச்சி (ஆங்கிலம்: Irupu Falls; கன்னடம்: ಇರ್ಪು ಜಲಪಾತ) கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தின் எல்லையில் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பிரம்மகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. நாகர்ஹோளே தேசிய பூங்காவிற்குச் செல்லும் நெடுஞ்சாலையில் விராசுப்பேட்டையிலிருந்து 48 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சி ஒரு நன்னீர் நீர்வீழ்ச்சியாகும்.[1] இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து இலட்மண தீர்த்த ஆறு தொடங்கி கிருஷ்ணராசசாகர ஏரியில் காவிரி ஆற்றுடன் இணைவதால், இது இலட்மண தீர்த்த நீர்வீழ்ச்சி எனவும் அழைக்கப்படுகிறது.[2]
தெற்கு குடகிலுள்ள பிரம்மகிரி சிகரத்திற்கு இந்த நீர்வீழ்ச்சிப் பகுதியிலிருந்து ஒரு வனப் பாதை செல்கிறது. இருப்பு நீர்வீழ்ச்சி ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகவும், ஒரு புனித யாத்திரை இடமாகவும் உள்ளது. ஒரு புகழ்பெற்ற சிவன் கோவிலான இராமேசுவர கோயில், இலட்சுமண தீர்த்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது[1]. சிவராத்திரி திருவிழாவின் போது இந்த கோவிலில் பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.[2]
பிரபலமான புராணக்கதைப்படி, இராமர், இலட்சுமணன் இருவரும் சீதாவைத் தேடுகையில் பிரம்மகிரி மலைத்தொடர் வழியாக சென்றனர். இராமர் லட்சுணனிடம் தண்ணீர் கேட்டபோது, லட்சுமணன் பிரம்மகிரி மலைகளில் அம்பு எய்து, இலட்சுமண தீர்த்தத்தை உருவாக்கினான்.[3] இந்த புராணத்தின் காரணமாக, இது பாவங்களைத் தீர்க்க வல்லது என்று நம்பப்படுகிறது. சிவராத்திரி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.[4]
மழைக்காலங்களில் இந்த நீர்வீழ்ச்சி அதன் முழு கொள்ளவையுடன் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமையும்.[2] இவ்விடத்திற்கு இருப்பு பாதை வழியாக பெங்களூரிலிருந்து 260 கிலோமீட்டர் தூரத்திலும், மைசூர் நகரிலிருந்து 120 கி.மீ. தொலைவும் 48 கி.மீ விராசுப்பேட்டையிலிருந்தும் பயணிக்கலாம். ஸ்ரீமங்களத்துக்குப் பிறகு கோட்டா சாலையில் இருந்து கோனிகோபாலிலிருந்து நாகர்ஹோளே தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலை வழியாக இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகை தரலாம்.[3]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)