இனங்காட்டிகள் | |
---|---|
506-82-1 | |
ChemSpider | 10254476 |
EC number | 208-055-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10479 |
| |
UNII | 0T3G3H597H |
பண்புகள் | |
C2H6Cd | |
வாய்ப்பாட்டு எடை | 142.48 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | விரும்பத்தகாத; ஏற்றுக்கொள்ள முடியாத மணம் |
அடர்த்தி | 1.985 கி/மி.லி |
உருகுநிலை | −4.5 °C (23.9 °F; 268.6 K) |
கொதிநிலை | 106 °C (223 °F; 379 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நஞ்சு |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H250, H252, H260, H301, H330, H350, H360 | |
P101, P102, P103, P231, P222, P301+310, P303+361+353, P305+351+338, P403+233, P422, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 18 °C (64 °F; 291 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இருமெத்தில்காட்மியம் (Dimethylcadmium) என்பது Cd(CH3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமகாட்மியம் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இருமெத்தில்காட்மியம் அதிக நச்சுத்தன்மை கொண்டதாகவும் காற்றில் புகையும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. நேர்கோட்டு மூலக்கூறு கட்டமைப்பில், 213 பைக்கோ மீட்டர் நீளம் கொண்ட C-Cd பிணைப்புகளால் இச்சேர்மம் ஆக்கப்படுகிறது.[1] கரிமத் தொகுப்பு வினைகள் மற்றும் உலோகக்கரிம இரசாயன நீராவி படிவு முறை ஆகியவற்றில் மட்டும் இந்த சேர்மம் சில பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. காட்மியம் செலீனைடு மீநுண் துகள்களின் தயாரிப்பிலும் இருமெத்தில்காட்மியம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இதன் நச்சுத்தன்மையின் காரணமாக இப்பயன்பாடுகளில் இதை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[2]
காட்மியம் ஈராலைடுகளுடன் மெத்தில் கிரிக்கனார்டு வினையாக்கிகள் அல்லது மெத்தில்லித்தியம் வினையாக்கியைச் சேர்த்து சூடுபடுத்தினால் இருமெத்தில்காட்மியம் தோன்றுகிறது.[3]
இதே முறையிலேயே முதன் முதலில் தயாரிக்கப்பட்ட இருமெத்திலகாட்மியமும் தயாரிக்கப்பட்டது.[4]
இருமெத்திலகாட்மியம் வலிமை குறைந்த ஓர் இலூயிசு அமிலமாகும். ஈதருடனும் பைபிரிடினுடனும் சேர்ந்து இது ஒரு கூட்டுவிளைபொருளாக உருவாகிறது.[3]