பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
14215-32-8 | |
ChemSpider | 57449725 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 57348355 |
| |
பண்புகள் | |
Fe(N3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 181.9053 கி/மோல் |
தோற்றம் | அடர் பழுப்பு திண்மம்[1] |
உருகுநிலை | வெடிக்கும் |
கரைதிறன் | மெத்தனாலில் கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS01 |
GHS signal word | அபாயம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | கோபால்ட்டு(II) அசைடு நிக்கல்(II) அசைடு தாமிரம்(II) அசைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(III) அசைடு (Iron(III) azide) என்பது Fe(N3)3 or FeN9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிக் அசைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் எளிதாக வெடிக்கும் தன்மை கொண்டதாகும். உணர்திறன் மிகுந்த இரும்பு(III) அசைடு நீருறிஞ்சும் பண்பு கொண்ட ஓர் அடர் பழுப்பு நிற திண்மமாகும். என்-பியூட்டைல் அசைடு போன்ற பல்வேறு அசைடோ ஆல்கேன்களை தயாரிக்க இச்சேர்மம் பயன்படுகிறது.[2]
சோடியம் அசைடுடன் இரும்பு(III) சல்பேட்டையும் மெத்தனாலையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் இரும்பு(III) அசைடு உருவாகிறது:[2]
இரும்பு(II) பெர்குளோரேட்டு, சோடியம் அசைடு, ஐதரசன் பேரொட்சைடு ஆகிய சேர்மங்களின் கலவையை கதிரியக்கத் துடிப்புக்கு உட்படுத்தியும் இரும்பு(III) அசைடைத் தயாரிக்கலாம்.[3]