இலக்கு நீக்குதல் (stumping) என்பது துடுப்பாட்டத்தில் மட்டையாடுபவரை வீழ்த்தும் முறைகளில் ஒன்றாகும். இந்தச் சொல் ஓர் இலக்குக் கவனிப்பாளர் மேற்கொள்ளும் இலக்கு வீழ்த்தலை மட்டுமே குறிக்கும். பந்துவீச்சாளரால் வீழ்த்தப்படுவது இலக்கு வீச்சு என்றும் களத்தடுப்பாளரால் வீழ்த்தப்படுவது ஓட்ட வீழ்த்தல் என்றும் அழைக்கப்படுகின்றன.[1].
சில வேளைகளில் வீசப்பட்ட பந்தை அடிப்பதற்காக மட்டையாடுவர் தனது எல்லைக்கோட்டைத் தாண்டி முன்னோக்கி வரும்போது அந்தப் பந்து மட்டையில் படாமல் பின்பிக்கமாக சென்றால் அங்கு நின்றுகொண்டிருக்கும் இலக்குக் கவனிப்பாளர் உடனடியாக அந்தப் பந்தைப் பிடித்து தனக்கு முன்பு உள்ள இலக்குக் குச்சிகளை அடித்து அதன் மேலுள்ள மரத்துண்டுகளை நீக்கலாம். அப்போது மட்டையாடுபவரின் உடல் பாகம் அல்லது அவரது மட்டை எல்லைக்கோட்டிற்குள் இல்லாமல் இருந்தால் அவர் ஆட்டமிழப்பார்.
வகை | வீழ்த்தல்கள் | வீரரின் பெயர் | போட்டிகள் |
தேர்வு | 52 | பெர்ட் ஓல்ட்ஃபீல்ட் | 54 |
---|---|---|---|
ஒநாப | 123 | மகேந்திரசிங் தோனி | 350 |
இ20ப | 34 | மகேந்திரசிங் தோனி | 98 |
கடைசியாக மேம்படுத்தியது: 25 ஆகத்து 2019[2][3][4] |