பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலந்தனம்(3+);முச்சல்பைடு
| |
வேறு பெயர்கள்
இரு இலந்தனம் முச்சல்பைடு, இலந்தனம் செசுக்கியுசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12031-49-1 | |
ChemSpider | 145449 |
EC number | 235-592-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165996 |
| |
பண்புகள் | |
La2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 373.99 g·mol−1 |
தோற்றம் | செம்மஞ்சள் படிகங்கள் |
அடர்த்தி | 4.9 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 2,100 °C (3,810 °F; 2,370 K) |
தண்ணீருடன் வினை புரியும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம்(III) சல்பைடு, புரோமித்தியம்(III) சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலந்தனம்(III) சல்பைடு (Lanthanum(III) sulfide) என்பது La2S3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3][4]
உலோக இலந்தனத்தின் மீது கந்தக ஆவியைச் செலுத்தி இலந்தனம்(III) சல்பைடு தயாரிக்கப்படுகிறது.
இலந்தத்தின் மீது ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தியும் இதை தயாரிக்கலாம்.
ஒடுக்கும் முகவர்கள் முன்னிலையில் இலந்தனம் ஆக்சைடு மீது ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்துவதாலும் இலந்தனம்(III) சல்பைடு உருவாகிறது.
இரு இலந்தனம் முச்சல்பைடு கனசதுரப் படிக அமைப்பில் இடக்குழு I43d மற்றும் a = 0.8706 நானோமீட்டர் என்ற அலகு செல் அளவுருவுடன் செம்-மஞ்சள் நிறப் படிகங்களாக இலந்தனம்(III) சல்பைடு உருவாகிறது.[5] குளிர்ந்த நீரில் இது கரையாது.
இலந்தனம்(III) சல்பைடு அணைவுச் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு முன்னோடியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கண்ணாடி உற்பத்தி மற்றும் கண்ணாடி இழை உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது.[6]