பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் மோனாக்சைடு எதிர்மின்னயனி
| |
வேறு பெயர்கள்
Lithate
| |
இனங்காட்டிகள் | |
64538-53-0[1] | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
LiO− | |
வாய்ப்பாட்டு எடை | 22.94 g·mol−1 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Extremely corrosive |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் மோனாக்சைடு எதிர்மின்னயனி (Lithium monoxide anion) என்பது (LiO−) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அறியப்படும் வாயு நிலையில் உள்ள ஒரு மீக்கார அயனியாகும். 2008 ஆம் ஆண்டு வரை இலித்தியம் மோனாக்சைடு எதிர்மின்னயனி மிகவும் வலுவான அறியப்பட்ட காரமாக இருந்தது. இதன் பின்னர் கட்டமைப்பில் மாறுபட்ட ஈரெத்தினைல் பென்சீன் ஈரயனி அதிக புரோட்டான் தொடர்பைக் கொண்டிருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. இலித்தியம் மோனாக்சைடு எதிர்மின்னயனி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் மெத்தினைடு அயனி வலுவான காரமாக இருந்தது.[2]
இலித்தியம் மோனாக்சைடு எதிர்மின்னயனியின் புரோட்டான் நாட்டம் ~1782 கிலோயூல்/மோல்[3] ஆகும்.
மோதலால் தூண்டப்பட்ட விலகல் நிலைமைகளின் கீழ் இலித்தியம் ஆக்சலேட்டு அயனின் தொடர்ச்சியான கார்பாக்சில் நீக்கம் மற்றும் கார்பனைல் நீக்கம் வினைகளின் மூலம் நிறைநிறமாலைமானியில் இந்த அயனி தயாரிக்கப்படுகிறது:
இலித்தியம் மோனாக்சைடு எதிர்மின்னயனியை தயாரிக்க உதவும் மேலே உள்ள முறை திறனற்றதாகவும் செயல்படுத்த கடினமானதாகவும் உள்ளது. தேவையான அயனி காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் மூலக்கூறு ஆக்சிசனுடன் விரைவாக வினைபுரிகிறது. மோதல் தூண்டப்பட்ட விலகல் செயல்முறையுன் படிகளை செயல்படுத்த கருவியில் அறிமுகப்படுத்தப்படும் உயர் அழுத்த ஆர்கானால் வினை மேலும் தீவிரமடைகிறது.[4]