ஜாதக கதைகளின்படி
ஜாதகக் கதையின்படி, இளவரசர் சத்வா கவுதம புத்தரின் முந்தைய அவதாரங்களில் ஒருவர் என கருதப்படுகிறார் [2]
மஹாரத மன்னரின் மகனாகிய இளவரசர் சத்வா பின்னர் துறவு கொண்டு அவரின் போதனைகளை பின்பற்றும் சில சீடர்களைப் பெற்றுள்ளார் .
ஜாதக கதைகளின் படி, துறவு மேற்கொண்ட சத்வா தனது நெருங்கிய சீடருடன் நடைபயணத்தில் வந்து கொண்டிருந்த போது, ஒரு குன்றின் அடிவாரத்தில் பட்டினியால் வாடும் புலியையும் அதன் பச்சிளம் குட்டியையும் காண்கின்றனர். போதிசத்துவ நிலையில் உள்ள அவர் தனது சீடரை அருகில் எங்காவது சென்று அந்த புலிக்கும் அதன் குட்டிக்கும் பசியாறும் வகையில் எதாவது உணவினை தேடிகிச்செல்ல அறிவுறுத்துகிறார். அதன்படி சீடரும் சென்றுவிட தன தவ வலிமையால் உணவு கிடைக்கவில்லை என்பதை அறிந்த சத்துவர் தனது உடலின் சதை பகுதியால் தான் அந்த புலியின் பசியை போக்க இயலும் என்பதை உணர்கிறார்.அதன்படி அவரது உடம்பை விட்டு விடுவதன் மூலமே அவ்விரு உயிர்களை காப்பாற்ற முடியும் என அறிந்து அந்த குன்றி விளிம்பில் ஏறி அங்கிருந்து குதித்து உயிரை மாய்த்து கொள்கிறார். அந்த சத்தத்தால் புலியின் கவனத்தை ஈர்த்து அவரது உடலை உண்ண செய்து பசியாற்றுகிறார்.
அதன்படி, பெருந்தன்மை, துறவு, ஒழுக்கம், தீர்மானம் மற்றும் சமநிலை என பௌத்தத்தின் பத்து பரிபூரணங்களில் சிலவற்றில் பூரணதத்துவத்தை கண்டடைந்தார். தேடிப்போன இடங்களில் உணவு கிடைக்காமல் திரும்பி வந்த அந்த சீடன், போதிசத்துவர் செய்ததைக் கண்டு, அவரது நல்ல செயலில் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் ஞானமும் அடைகிறார். அதை பிறருக்கும் பரப்ப, அவ்விடத்திற்க்கு அவரது மற்ற சீடர்களுடன் வந்தடைந்தது மட்டுமல்லாமல் தேவர்களும் வானத்திலிருந்து அந்த இடத்தை தாமரை மலர்களால் பொழிந்து ஆசிர்வதித்தனர்.
வட இந்தியாவின் நான்கு பெரிய ஸ்தூபிகளில் ஒன்று இந்த புத்தரின் அவதாரத்தின் தேஹதானத்தை[3] நினைவுகூரும் வகையில் உள்ளதாக சீன யாத்ரீகர் ஃபாக்ஸியன் தெரிவித்துள்ளார். இந்திய பௌத்த கதை இலக்கியத்தில்[4] இந்த தேஹதானம் "உடலின் பரிசு" என்று அழைக்கப்படுகிறது.
{{cite book}}
: Missing or empty |title=
(help)