ஈப்போ பாராட் (P065) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Ipoh Barat (P065) Federal Constituency in Perak | |
மாவட்டம் | கிந்தா மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 114,654 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | ஈப்போ பாராட் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | ஈப்போ, பெர்ச்சாம், மெங்லெம்பு, குனோங் ரப்பாட், ஜெலாப்பாங், புந்தோங், கிளேபாங் |
பரப்பளவு | 37 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | எம். குலசேகரன் (M. Kulasegaran) |
மக்கள் தொகை | 134,978 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ipoh Timor; ஆங்கிலம்: Ipoh Timor Federal Constituency; சீனம்: 怡保东区国会议席) என்பது மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் (Kinta District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P065) ஆகும்.[7]
ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
ஈப்போ மாநகரம் இரு மக்களவைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஈப்போவின் கிழக்குப் பகுதி ஈப்போ தீமோர் என்றும்; மேற்குப் பகுதி ஈப்போ பாராட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரம் கிந்தா ஆற்றின் கரைகளில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் இருக்கும் கிந்தா பள்ளத்தாக்கு ஆகும். இங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் உலக மக்களின் பார்வை அங்கே திரும்பியது.
2021-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, ஈப்போவின் மக்கள் தொகை 1,022,240. அந்த வகையில், அதிக மக்கள் தொகை கொண்ட மலேசிய மாநகரங்களில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் ஈப்போ பெரும் வணிகத் தளமாகப் புகழ் பெற்று விளங்கியது. மக்களில் பலர் செல்வந்தர்களாகும் நோக்கத்தில் ஈப்போவில் குவியத் தொடங்கினர். ஈப்போ நகரமும் வளப்பம் அடைந்தது.
ஈப்போ நகரம், மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் மாநகரில் இருந்து 200 கி.மீ. வடக்கே உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகவும் ஈப்போ நகரத்தை அடையலாம். ஈப்போ மாநகரம் கிந்தா பள்ளத்தாக்கின் நடு மையத்தில் அமைந்து உள்ளது.
ஈப்போவைப் புகழ் பெறச் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் சர் பிராங்க் சுவெட்டன்காம் (Sir Frank Swettenham). 1920-ஆம் ஆண்டுகளில் ஈப்போ ஒரு மாபெரும் ஈயப் பட்டணமாக உருவெடுத்தது. ஈப்போ நகரை கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. மேற்குப் பகுதியில் பழைய நகரமும் கிழக்குப் பகுதியில் புதிய நகரமும் இருக்கின்றது.
1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி ஜப்பானியர்கள் ஈப்போவின் மீது படை எடுத்தனர். அவர்களின் ஆட்சி காலத்தில் பேராக் மாநிலத்தின் தலைமைப் பட்டணமாக ஈப்போ அறிவிக்கப்பட்டது.[8] அதற்கு முன்னர் தைப்பிங் நகரம் தான் பேராக் மாநிலத்தின் தலைப் பட்டணமாக இருந்தது.
ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1994-ஆம் ஆண்டில் ஈப்போ பாராட் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P062 | 1995–1999 | கோ சியோங் சிங் (Ho Cheong Sing) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P065 | 2004–2008 | எம். குலசேகரன் (M. Kulasegaran) |
ஜனநாயக செயல் கட்சி |
12-ஆவது மக்களவை | 2008–2013 | பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
114,654 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
79,314 | 68.34% | ▼ - 10.43% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
78,356 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
185 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
773 | ||
பெரும்பான்மை (Majority) |
56,667 | 72.32% | + 2.45 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [9] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
எம். குலசேகரன் (M. Kulasegaran) |
பாக்காத்தான் | 78,356 | 63,915 | 72.14% | - 3.33% ▼ | |
லோ குவோ நான் (Low Guo Nan) |
பாரிசான் | - | 7,248 | 9.25% | - 5.85 % ▼ | |
செக் குவோங் வெங் (Chek Kwong Weng) |
பெரிக்காத்தான் | - | 6,815 | 8.70% | + 8.70% | |
எம். கேவியஸ் (M. Kayveas) |
சுயேச்சை | - | 378 | 0.48% | + 0.48% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)