உணவுக்குழலிய விழுங்கற்கடுமை

நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
உணவுக்குழலிய
விழுங்கற்கடுமை

வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
ஐ.சி.டி.-10 R13.
ஐ.சி.டி.-9 787.24
நோய்த் தரவுத்தளம் 17942
MedlinePlus 003115
ஈமெடிசின் pmr/194 
MeSH D003680

உணவுக்குழலிய விழுங்கற்கடுமை (Esophageal dysphagia) என்பது உணவுக்குழாயின் உடல் பாகத்தில் அல்லது கீழ்க் கள இறுக்கியில் இயக்கக் குறைபாடுகள் ஏற்படும் பட்சத்தில் உண்டாகும் விழுங்கற்கடுமையாகும்.[1]

நோய்க்குறிகள்

[தொகு]

உணவு விழுங்கியதன் சில செக்கன்களின் பின்னர் மார்பெலும்பின் பிற்பகுதியில் உணவு உணவு தடைப்பட்டு உள்ளதென நோயாளி சுட்டிக்காட்டுவார். திண்ம மற்றும் நீர்ம உணவுப்பொருட்கள் உட்கொள்ளல் சிக்கலெனின் அது பெரும்பாலும் உணவுக்குழாயின் அசையும் ஆற்றல் இழப்பினால் ஏற்பட்டுள்ளது எனக் கருதலாம். விழுங்கற்கடுமை திண்ம உணவுக்கு மட்டுமெனில் அது பெரும்பாலும் பொறிமுறைத் தடையாலாகும், இதன் பின்னர் விழுங்கற்கடுமை தொடர்ச்சியாக உள்ளதா அல்லது இடைக்கிடையே வந்து போகின்றதா என்பது அறியப்படல் அவசியமாகின்றது. இடைக்கிடையே ஏற்படும் விழுங்கற்கடுமை உணவுக்குழாய் இறுக்கம் அடைவதால் உண்டாகும். தொடர்ச்சியான விழுங்கற்கடுமையானது, உணவுக்குழாய் தசை தளராமை (achalasia), இசுகெளிரோடேர்மா (scleroderma) போன்ற சந்தர்ப்பங்களில் உண்டாகின்றது, இதன்போது நெடுங்கால நெஞ்செரிவு, பின்னோட்டம், சுவாசச் சிக்கல்கள், எடை குறைவு என்பன ஏற்படுகின்றன. தொடர்ச்சியான விழுங்கற்கடுமைக்கு உணவுக்குழாய்க் காயவடுக்களும் உணவுக்குழாய்ப் புற்றுநோயும் ஒரு காரணமாகும்.

அறுதியிடல்

[தொகு]

அகநோக்கி மூலம் உணவுக்குழாய் நோக்கப்படுகின்றது. உணவுக்குழாய் அழற்சி இருந்தால் உணவுக்குழாய்க் காயவடுக்கள் ஏற்பட்டிருக்கும். இதன்போது உயிரகச்செதுக்கு மூலம் ஆராய இழையங்கள் எடுக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Evaluation and Treatment of Swallowing Impairments - April 15, 2000 - American Academy of Family Physicians". Archived from the original on 2008-08-19. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.