உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் | |||||
---|---|---|---|---|---|
திருவிதாங்கூர் மகாராஜா என்ற பட்டம் மட்டுமே இருந்தது (மன்னராட்சி ஒழிக்கப்பட்டது) | |||||
உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் | |||||
ஆட்சி | 1991–2013 | ||||
முடிசூட்டு விழா | 1991 | ||||
முன்னிருந்தவர் | சித்திரை திருநாள் பலராம வர்மன் | ||||
பின்வந்தவர் | மூலம் திருநாள் ராம வர்மன் | ||||
துணைவர் | காயங்குளத்தைச் சேர்ந்த அம்மச்சி பனம்பிள்ளை அம்மா சிறீமதி ராதாதேவி பண்டாலை [1] | ||||
வாரிசு(கள்) | அனந்தபத்மநாபன் தம்பி, பார்வதி தேவி தங்கச்சி[2] | ||||
| |||||
மரபு | வேணாடு சொரூபம் | ||||
அரச குலம் | குலசேகர வம்சம் | ||||
தந்தை | ரவி வர்மா கொச்சு கோயில் தம்புரான் | ||||
தாய் | ராஜமாதா' மூலம் திருநாள் சேது பார்வதிபாயி | ||||
பிறப்பு | திருவிதாங்கூர் | 22 மார்ச்சு 1922||||
இறப்பு | 16 திசம்பர் 2013 திருவனந்தபுரம், இந்தியா | (அகவை 91)||||
சமயம் | இந்து சமயம் |
சிறீ பத்மநாபதாச சிறீ உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் (Sree Padmanabhadasa Sree Uthradom Thirunal Marthanda Varma) (1922 மார்ச் 22 - 2013 திசம்பர் 16) திருவிதாங்கூரின் மகாராஜாவான [3] இவர், திருவிதாங்கூர் இராச்சியத்தின் கடைசி மன்னர் மகாராஜா சித்திரை திருநாள் பலராம வர்மனின் தம்பியாவார்.
திருவிதாங்கூர் திருமண சட்டத்தின்படி பிறப்பிலேயே இவர் திருவிதாங்கூரின் வாரிசானார். 1952இல் பெங்களூரில் உள்ள பிளைமவுத் என்றா வாகன நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு ஒரு எழுத்தராகவும், வாகன ஓட்டுனராகவும் சில காலம் பணியாற்றினார். இவர் பிராந்திய இளையோர் சாரணர் சங்கத்தின் தலைமை சாரணராக இருந்தார். மேலும் உள்ளூர் மருத்துவமனைகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் புரவலராகவும் இருந்துள்ளார். [4]
இவர் இராணுவ அதிகாரி கிருட்டிணன் கோபிநாதன் பண்டாலை என்பவரின் மகளை மணந்தார். இவர் திருவனந்தபுரத்தின் பட்டோம் அரண்மனையில் 2013 இல் தான் இறக்கும் வரை வசித்து வந்தார். [4]
இவர் திருவாங்கூரைச் சேர்ந்த மகாராணி சேது பார்வதிபாயி,கிளிமானூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ரவி வர்மா கொச்சு கோயில் தம்புரான் ஆகியோரின் இளைய மகனாவார். இவர் 1922 மார்ச் 22 அன்று திருவிதாங்கூரில் பிறந்தார். சித்திரை திருநாள் பலராம வர்மன், கார்த்திகை திருநாள் லட்சுமி பாயி ஆகியோர் இவரது உடன்பிறப்புகள் ஆவர். இவரது தாயார், சேது பார்வதிபாய் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தூரத்து சொந்தத்தில் நேரடி பெண் வாரிகள் வரிசையில் பிறந்தவர். திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு வாரிசுகள் இல்லாததைத் தொடர்ந்து, 1900 ஆம் ஆண்டில், இவர், இவரது மூத்த தாய்வழி உறவினர் சேது லட்சுமி பாயியுடன், இவரது தாய்வழி பெரியம்மா, மூத்த மகாராணி இலட்சுமி பாயால் தத்தெடுக்கப்பட்டார். திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் திருமண மரபுகளின்படி, இவர் பிறந்த போது, திருவிதாங்கூரின் வாரிசாக சிறீ பத்மநாபதாச மகாராஜகுமார் சிறீ மார்தாண்ட வர்மன், திருவிதாங்கூர் இளைய ராஜா (பட்டத்து இளவரசன்) என்றப் பட்டப்பெயரில் அறிவிக்கப்பட்டார்.
உத்திராடம் திருநாள் பல்வேறு பாடங்களில் 14 ஆசிரியர்கள் குழுவால் தனிக் கல்வி கற்றார். பின்னர் இவர் அப்போதைய திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், வரலாறு ஆகியவற்றில் 1943 இல் நிபுணத்துவம் பெற்றார். இவர் பல்கலைக்கழகத்திலிருந்து சமசுகிருதத்தில் சிறந்த மாணவருக்கான 'மாங்கொம்பு ஆண்டி ஐயர் தங்கப் பதக்கம்' பெற்றார். இவரது புலமைக்காக இவர் மதிக்கப்பட்டார். [5]
இவர் தனது மூத்த சகோதரரும் திருவிதாங்கூரின் கடைசி மன்னருமான சித்திரை திருநாள் பலராம வர்மன் 1991 இல் இறந்த பிறகு திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தின் தலைவரானார். மகாராஜா என்ற பெயரில், இவருக்கு உண்மையான நிர்வாக அதிகாரம் இல்லை. [6] [7] ஆனால் திருவிதாங்கூரில் பிரபலமான நபராக இருந்தார். மேலும் தினசரி நிகழ்ச்சிகளையும் கொண்டிருந்தார். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் பாதுகாவலராக தனது மரியாதையை நிலைநாட்டினார். மேலும் கோயில் தொடர்பான நிகழ்வுகளிலும் ஈடுபட்டார். திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயிலின் பெட்டகங்களில் அபரிமிதமான செல்வம் கண்டுபிடிக்கப்பட்டதில், திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தின் பங்களிப்பு இருந்தது. இவர் இது பற்றி: "இது பல நூற்றாண்டுகளாக கோயில் பெட்டகங்களில் உள்ளது என அரச குடும்பத்தினர் அதை நன்கு அறிந்திருக்கிறார்கள். இது பகவான் பத்மநாபத்தின் செல்வம். நாங்கள் அதில் ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை. இது எதிர்காலத்திலும் கடவுளின் செல்வமாக பாதுகாக்கப்பட வேண்டும் " என்று கூறினார். தற்போது உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மனின் வாரிசாக சிறீ பத்மநாபதாச சிறீ மூலம் திருநாள் ராம வர்மன் இருக்கிறார். [8] [9]
இவர் காயம்குளத்தைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரி (லெப்டினன்ட்-கர்னல் ) கிருட்டிணன் கோபிநாதன் பண்டாலை என்பவரது மகளான அம்மாச்சி பனபிள்ளை அம்மா சிறீமதி ராதாதேவி பண்டாலை என்பவரை மணந்தார். இவர்களுக்கு அனந்தபத்மநாபன் தம்பி என்ற மகனும், பார்வதி தேவி தங்கச்சி என்ற மகளும் இருந்தனர். திருவனந்தபுரம் பட்டம் அரண்மனையில் உத்திராடம் திருநாள் வசித்து வந்தார். ஒரு சைவ உணவுப் பிரியரான இவர் ஒருபோதும் மது அருந்தாதவர். மேலும் இவர் காபி அல்லது தேநீர் அல்லது புகை ஆகியவற்றிலும் நாட்டமில்லாதவராக இருந்தார். இவர் ஒரு தொழில்முறை குதிரை சவாரி செய்பவராக இருந்து பல கோப்பைகளையும் வென்றுள்ளார். இவர் டென்னிசு, வளைதடிப் பந்தாட்டம், குழிப்பந்தாட்டம், கால்பந்தாட்டம் மற்றும் போலோ போன்ற விளையாட்டுகளை விளையாடினார். 1934 ஆம் ஆண்டில் இவரது சகோதரர் சித்திரை திருநாள் பலராம வர்மன் இவருக்கு ஒரு புகைப்பட கருவியை அளித்தார். இந்தக் கருவியைக் கொண்டு சுமார் 5,000 மேற்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை உருவாக்கினார். மேலும் இவர் நிறைய வாகனப் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். [11] [12] இசுடட்கார்ட்டில் உள்ள [[பென்ஸ் நிறுவனத்திடமிருந்து பல பதக்கங்களை வென்றார்.
இரைப்பை-குடல் இரத்தப்போக்கு காரணமாக உத்திராடம் திருநாள் 2013 திசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2013 திசம்பர் 16 அன்று இருதய அடைப்பு காரணமாக இறந்தார். இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக திசம்பர் 16 அன்று மாநில அரசு பொது விடுமுறை அறிவித்தது. [13] உத்திராடம் திருநாள் மகாராஜா என்றாலும், மக்கள் இவரை 'தம்புரான்' மற்றும் 'திருமனசு' (ஆண்டவர் அல்லது உயர்நிலை) என்று அழைத்தனர். இவர் தலைநகரான திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, பத்மநாபசாமியை தனது குடும்ப தெய்வமாக ஆண்டுக்கு இரண்டு முறை ஆராட்டு ஊர்வலத்திற்கு அழைத்துச் செல்வார். இவரது மனைவி அம்மச்சி பனபிள்ளை அம்மா சிறீமதி இராதாதேவி பண்டாலை 1993இல் இவருக்குப்பின் இப்பணிகளை செய்து வருகிறார்.
உத்திராடம் திருநாளின் மறைவு காரணமாக மூலம் திருநாள் ராம வர்மன் திருவிதாங்கூரின் மகாராஜாவாகவும், ரேவதி திருநாள் பாலகோபால வர்மன் இளையராஜாவாகவும் ஆயினர்.
உமா மகேஸ்வரி என்ற எழுத்தாளர் எழுதிய உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மனின் சுயசரிதையான திருப்படித் தானம் என்ற புத்தகத்தை மாத்ருபூமி நிறுவனம் வெளியிட்டது. திருவிதாங்கூர் மன்னர் அனுசம் திருநாள் வீரபாலா மார்த்தாண்ட வர்மர் தனது நாட்டை பத்மநாபசாமியிடம் "திருப்படித் தானம்" என்று குறிப்பிடும் ஒரு செயலின் மூலம் சரணடைந்ததாக இந்த புத்தகம் கி.பி. 1750களில் தொடங்குகிறது. திருவிதாங்கூர் ஆட்சியாளர்களின் கலை-கலாச்சார வாழ்க்கை முறையையும் இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது. மேலும் இவரது மூத்த சகோதரரும், மகாராஜாவுமான சித்திரை திருநாள் பலராம வர்மரைப் பற்றிய தனிப்பட்ட கணக்கையும் வழங்குகிறது.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)