உத்தேஜ் | |
---|---|
பிறப்பு | நல்கொண்டா மாவட்டம், தெலங்காணா, இந்தியா |
பணி |
|
வாழ்க்கைத் துணை | பத்மாவதி (இற. 2021) |
உத்தேஜ் (Uttej) ஓர் இந்திய நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். சந்தமாமா (2007) திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவையாளருக்கான நந்தி விருதை வென்றார்.[1]
உத்தேஜ், நல்கொண்டா மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தார். [2] இவர் பிரபல பாடலாசிரியர் சுத்தலா அசோக் தேஜாவின் மருமகன் ஆவார்.[3] புற்றுநோயால் 2021 செப்டம்பரில் இறந்த பத்மாவதியை உத்தேஜ் மணந்தார். [4]
உத்தேஜ், 1989 இல் ராம் கோபால் வர்மா இயக்கிய சிவா என்ற படத்தில் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இப்படத்தில் உணவு விடுதியில் பணிபுரிபவராகவும் ஒரு வேடத்தில் நடித்திருந்தார். [5] சிவா படத்தில் வில்லனாக நடிக்க ஜே. டி. சக்ரவர்த்தியை பரிந்துரைத்தார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், குலாபி படத்திற்காக கிருஷ்ண வம்சியிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.