பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
உருபீடியம்(1+);அசைடு
| |
வேறு பெயர்கள்
உருபீடியம் அசைடு
| |
இனங்காட்டிகள் | |
22756-36-1 | |
ChemSpider | 81078 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 89824 |
| |
பண்புகள் | |
RbN3 | |
வாய்ப்பாட்டு எடை | 127.49 g⋅mol−1 |
தோற்றம் | நிறமற்றது, ஊசிகள்[1] |
அடர்த்தி | 2.79 கி⋅செ.மீ−3[1][2] |
உருகுநிலை | 317–321 °C (603–610 °F; 590–594 K)[2][4] |
கொதிநிலை | சிதையும் |
| |
கரைதிறன் | 0.182;கி/100கி (16°செல்சியசு, எத்தனால்)[3] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−0.1கி.கலோரி;மோள்−1[2] |
தீங்குகள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | உருபீடியம் நைட்ரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் அசைடு சோடியம் அசைடு பொட்டாசியம் அசைடு வெள்ளி அசைடு அமோனியம் அசைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
உருபீடியம் அசைடு (Rubidium azide) என்பது RbN3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதரசோயிக் அமிலத்தின் (HN3) உருபீடியம் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. எல்லா அசைடுகளையும் போல இதுவும் வெடிக்கும் தன்மை கொண்டதாகும்.[4]
உருபீடியம் சல்பேட்டுடன் பேரியம் அசைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் உருபீடியம் அசைடு உருவாகும். இவ்வினையில் எளிதில் பிரிக்கப்படும் வகையிலான கரையாத பேரியம் சல்பேட்டு உடன் உருவாகிறது.[3]
ஓர் ஆய்வில், எத்தனாலின் முன்னிலையில் பியூட்டைல் நைட்ரைட்டு, ஐதரசீன் மோனோ ஐதரேட்டு மற்றும் உருபீடியம் ஐதராக்சைடு ஆகியவற்றுக்கு இடையேயான வினையால் உருபீடியம் அசைடு அசைடு உற்பத்தி செய்யப்பட்டது:
இந்த தயாரிப்பு முறை பொட்டாசியம் ஐதராக்சைடிலிருந்து பொட்டாசியம் அசைடு தயாரிப்பதற்கு உதவும் அதே முறையாகும். [5]
உருபீடியம் அசைடு கார நீராவி கலங்களில் சாத்தியமான பயன்பாட்டிற்காக ஆராயப்படுகிறது. அணு கடிகாரங்கள், அணு காந்தமானிகள் மற்றும் அணு சுழல் காட்டிகளில் கார நீராவி கலங்கள் கூறுகளாகப் பயன்படுகின்றன. அசைடுகள் விரும்பத்தக்க தொடக்கப் பொருட்களாகும். ஏனெனில் ஒரு வெளியீட்டின் படி இவை புற ஊதா ஒளியில் வெளிப்படும் போது உருபீடியம் உலோகம் மற்றும் நைட்ரசன் வாயுவாக சிதைவடைகின்றன.[6]
அறை வெப்பநிலையில், உருபீடியம் அசைடு பொட்டாசியம் ஐதரசன் புளோரைடு போன்ற அதே உருக்குலைந்த சீசியம் குளோரைடு கட்டமைப்பைக் கொண்டுள்ளது; 315 ° செல்சியசு வெப்பநிலை மற்றும் 1 வளிமண்டல அழுத்தத்தில் உருபீடியம் அசைடு சாதாரண சீசியம் குளோரைடு கட்டமைப்பிற்கு மாறும். உருபீடியம் அசைடின் II/I மாறுதல் வெப்பநிலை அதன் உருகுநிலையிலிருந்து 2 °செல்சியசு வெப்பநிலைக்குள் உள்ளது.[4]
உருபீடியம் அசைடு உயர் அழுத்த கட்டமைப்பு மாற்றத்தைக் கொண்டுள்ளது, இது 0 °செல்சியசு வெப்பநிலையில் சுமார் 4.8 கிலோபார் அழுத்தத்தில் நிகழ்கிறது. II/III மாற்றத்தின் மாறுதல் எல்லையை இந்த உறவால் வரையறுக்கலாம். , இங்குள்ள P கிலோபார் அழுத்தத்தையும் t செல்சியசு வெப்பநிலையில் வெப்பத்தையும் குறிக்கின்றன. [4]
அனைத்து அசைடுகளைப் போலவே, இதுவும் சூடாக்கப்படும்போது அல்லது கடுமையாக அதிர்ச்சியடையும் போது சிதைந்து நைட்ரசன் வாயுவை வெளியிடும்:
நைட்ரசன் வாயுவின் வழியாக உருபீடியம் அசைடை வெளியேற்றுவது உருபீடியம் நைட்ரைடை உருவாக்கும்.[7]
4.1 கிலோபார் அழுத்தம் மற்றும் சுமார் 460 பாகை செல்சியசு வெப்பநிலையில், உருபீடியம் அசைடு வெடித்துச் சிதைந்துவிடும்.[4] சாதாரண சூழ்நிலையில், இது 395 °செல்சியசு வெப்பநிலையில் வெடிக்கும். [2] புற ஊதா ஒளியின் வெளிப்பாட்டின் போதும் இது சிதைவடைகிறது.[6]
ரூபிடியம் அசைடு இயந்திர அதிர்ச்சிக்கு மிகவும் உணர்திறன் உடையதாகும். டிரை நைட்ரோ தொலுவீனுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு தாக்க உணர்திறன் கொண்டடுள்ளது.[8]
அனைத்து அசைடுகளையும் போலவே, உருபீடியம் அசைடும் நச்சுத்தன்மை வாய்ந்தது.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)