உலோத் அருவி Lodh Falls | |
---|---|
![]() | |
![]() | |
அமைவிடம் | லாத்தேகார், சார்க்கண்ட். இந்தியா |
வகை | Tiered |
ஏற்றம் | 137m |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 143m (469 ft) |
நீர்வழி | பர்கா நதி |
உலோத் அருவி (Lodh Falls) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் இருக்கும் லாத்தேகார் மாவட்டம் பாலமு கோட்டத்தில் உள்ள வனப்பகுதியின் நடுவில் உள்ளது. இதை புத்தா நீர் வீழ்ச்சி என்ற பெயராலும் அழைக்கிறார்கள். சார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகவும் இந்தியாவின் 21 ஆவது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகவும் இது கருதப்படுகிறது.[1]
லாத்தேகார் மாவட்டத்திலுள்ள சோட்டா நாக்பூர் பீடபூமியின் வனப்பகுதியில் பாய்கின்ற ஆழமான பர்கா நதியின் மீது லோத் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[2] ஓர் அடுக்குத் தொடர் நீர்வீழ்ச்சியான இது 143 மீட்டர் (469 அடி) உயரம் கொண்டதாகும்.[3] இந்நீர் வீழ்ச்சியின் முழக்கம் 10 கி.மீ தூரத்தில் கூட நன்றாக கேட்கக்கூடியதாகும்.[4]
புத்துணர்ச்சி அளிக்கும் பள்ளத்தாக்கு மடிவிடத்திற்கு லோத் நீர்வீழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாகும். பள்ளத்தாக்கு மடிவிடம் என்பது நீர்வீழ்ச்சியின் சரிவுகளில் காணப்படும் இடைவெளிகளைக் குறிக்கிறது. இத்தகைய சாய்வு இடைவெளிகள் நீர்வீழ்ச்சியின் நீரை செங்குத்தாக கீழ்நோக்கி விழுவதற்கு அனுமதிக்கிறது.[5] டால்டன்கஞ்சு நகரிலிருந்து 120 கி.மீ, தொலைவிலும், ராஞ்சியில் இருந்து 200 கி.மீ தொலைவிலும் லாத்தேகார் மாவட்டத்தின் மலை வாழிடமான நேதர்காட்டிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் லோத் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
{{cite book}}
: |work=
ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]