உள்ளே வெளியே | |
---|---|
![]() | |
இயக்கம் | பார்த்தீபன் |
தயாரிப்பு | சீதா |
கதை | பார்த்தீபன் |
இசை | இளையராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எம். வி. பன்னீர்செல்வம் |
படத்தொகுப்பு | கணேஷ் |
கலையகம் | ஏசி அபி. கிரியேஷன்ஸ் |
விநியோகம் | ஐஸ்வர்யம் பிக்சர்ஸ் |
வெளியீடு | 16 ஏப்ரல் 1993 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹3 கோடி |
உள்ளே வெளியே (ullee veliye) 1993 இல் வெளிவந்த குற்றவியல் சார்ந்த தமிழ்த் திரைப்படமாகும். பார்த்தீபன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். பார்த்தீபன், ஐஸ்வர்யா, செண்பகம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சீதா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் ஏப்ரல் 16, 1993இல் இது வெளியிடப்பட்டுள்ளது.[1][2][3][4]
கஜேந்திரன் (பார்த்தீபன்) குப்பம் ஒன்றில் வசித்து வந்தான். சிலகாலங்களிற்கு முன்பு கஜேந்திரனின் தந்தை கூலி வேலை செய்பவராகவும் பொதுவுடமை வாதச்செயற்பாடுகளிற்கு ஆதரவாகவும் செயற்பட்டு வந்தார். அவனுடைய தந்தை அவருடைய ஒருவரால் கொல்லப்பட்டதுடன் அக்கொலையை அவருடைய எதுவுமறியாத தாய் ராஜலட்சுமி (சபிதா ஆனந்த்) செய்தாரென சிறைச்சாலைக்கு அனுப்பபட்டும் இருந்தார். கஜேந்திரன் சிறைச்சாலையிலேயே பிறந்தான்.
அதன்பிறகு கஜேந்திரன் காவல் அதிகாரி மீனாவை (ஐஸ்வர்யா) காதலித்தான். பிறகு எம்எல்ஏ முத்துலிங்கம் (ராஜீவ்) அவனுடைய குப்பத்து குடிசைகளை கொழுத்திவிட்டு சில வாக்குகளை பெற்றுகொண்டான். கஜேந்திரன் அப்பாவி ஏழைகளுக்கு ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராக செயற்பட்டதுடன். இந்தியக் காவல் பணி தேர்வில் வெற்றி பெற்று காவல் அதிகாரி ஆகிறான். ஆனால் அவன் ஏழைகள் உட்பட அனைவரிடமும் இலஞ்சம் வாங்கினான். ஒருநாள் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கஜேந்திரனின் வீட்டை சோதனை செய்தபோது அதிகளவு பணம் சிக்கியது. ஆனால் நீதிமன்றில் கஜேந்திரனை காதலித்த செண்பகம் (செண்பகம்) அப்பணம் முழுவதும் தான் விபச்சாரம் செய்து பெற்ற பணம் என பொய் கூறி கஜேந்திரனை காப்பாற்றினாள். பின்னர் இதனால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டாள். கஜேந்திரன் பின்னர் மீனாவை திருமணம் செய்ததுடன் ஊழலுக்கு எதிராக செயற்படுவதே மீதிக்கதையாகும்.
இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். அத்தோடு 1993 ல் இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்வரிகளை வாலி, கங்கை அமரன் மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.[5][6]