வகை | சாலட் |
---|---|
தொடங்கிய இடம் | எசுப்பானியா |
பகுதி | வாலேன்சியா |
பரிமாறப்படும் வெப்பநிலை | அறை வெப்பநிலை |
முக்கிய சேர்பொருட்கள் | குடைமிளகாய்கள், உப்புகாட் மீன், வெள்ளைப்பூண்டு, இடலை எண்ணெய், சிலநேரத்தில் ஐரோப்பிய இடலை |
எசுகார்ரேட் (வாலென்சியன் மொழி: esgarradet[1], ஆங்கிலம்: "torn apart", Esgarrat) என்ற உணவு வகை, எசுப்பானியா நாட்டின் வளன்சியான் மாநிலம் பாரம்பரிய உணவு ஆகும் . இதில் வெப்பத்தால் பொறித்து எடுக்கப்பட்ட குடைமிளகாய், காட் மீன்கள், உணவுப் பதப்படுத்திகள், வெள்ளைப்பூண்டு, இடலை எண்ணெய், சில நேரங்களில் ஐரோப்பிய இடலை ஆகியன அடங்கியிருக்கும். இப்பெயர், அவ்வுணவு தயாரிக்கும் முறையில் இருந்து பெயர் பெற்றது. நீள்வடிவ மீனின் துண்டுகள், ஓரங்கள், குடைமிளகாய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது வாலேன்சியா நகரில் மட்டும் தயாரிக்கப்படும் தனித்துவமான உணவு ஆகும். இவ்வாறு தயாரிக்கப்படும் உணவில் ரொட்டித்துண்டுகளும் கலந்து பரிமாறப்படுகிறது.