S4716 என்பது பால்வழியின் மையத்தில் அமைந்துள்ள மீப்பொருண்மை தனுசுஏ (Sgr A*)கருந்துளையைச் சுற்றிவரும் ஒரு S வகை விண்மீனாகும், இது 100 வானியல் அலகு க்கு மிக நெருக்கமான அணுக்கமாக நொடிக்கு 8,000 கிலோமீட்டர் வேகத்தில் அதைச் சுற்றி வருகிறது. 2022 யூலை நிலவரப்படி, எசு4716 வட்டனைக்காலம் பால்வழியில் உள்ள எந்த விண்மீனிலும் மிகக் குறுகியதாக இருந்தது. இது 4.0 ஆண்டுகளில் Sgr A* கருந்துளையை, 0.75 மையப்பிறழ்வுடன் நீள்வட்ட வட்டணையில் சுற்றிவருகிரது. இதன். Sgr A* இலிருந்தான அண்மிய அணுக்கம் 15 பில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும் ( இது 2022 இல் விண்வெளி ஆய்வு வாயேஜர் 2 க்கான தோராயத் தொலைவு அல்லது சூரியனிலிருந்து நெப்டியூன் தொலைவை விட மூன்று மடங்கு), அதன் நெடுந்தொலைவு அணுக்கம் 100 பில்லியன் கிலோமீட்டர் ஆகும். இதைக் கெக் ஆய்வக NIRC2 ( Keck ), OSIRIS (Keck) ஆகிய தொலைநோக்கிகள் வழியாகவும் சின்ஃபோனி ( VLT ), நாக்கோ ( VLT ), ஈர்ப்பு ( VLT ) ஆகிய மிகப் பெரிய தொலைநோக்கிகள்( VLT ) வழி கண்டறியலாம். [1]