எச்டி 66428

HD 66428
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Monoceros
வல எழுச்சிக் கோணம் 08h 03m 28.66767s[1]
நடுவரை விலக்கம் -01° 09′ 45.7581″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.25[2]
இயல்புகள்
விண்மீன் வகைG5[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)44.26±0.13[1] கிமீ/செ
Proper motion (μ) RA: −65.766±0.029 மிஆசெ/ஆண்டு
Dec.: −206.999±0.019 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)18.7661 ± 0.0312[1] மிஆசெ
தூரம்173.8 ± 0.3 ஒஆ
(53.29 ± 0.09 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.09 ± 0.02[4] M
ஆரம்1.13 ± 0.03[4] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.37 ± 0.03[4]
ஒளிர்வு1.28 ± 0.01[4] L
வெப்பநிலை5773 ± 55[4] கெ
அகவை4.1 ± 1.4[4] பில்.ஆ
வேறு பெயர்கள்
BD−00°1891, HIP 39417, LTT 3038, SAO 135426
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எதிப 66428 என்பது G-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். இது சுமார் 174 ஒளி ஆண்டுகள் தொலைவில் மோனோசெரோசுஸ் விண்மீன் குழுவில் அமைந்துள்ளது. இந்த விண்மீன் 8.25 தோற்றப் பொலிவுப் பருமையும், 5705 ± 27 கெ இன் விளைவுறு வெப்பநிலையையும் சூரிய ஒளிர்வு 1.28 மதிப்பையும் கொண்டு சூரியனைப் போன்றுள்ளது. அதன் முழுமையான பருமை 11.1 ஆகவும், புற ஊதா வண்ணக் குறியீடு 0.71 ஆகவும் உள்ளது. இது ஒரு செயலற்ற விண்மீனாகக் கருதப்படுகிறது மேலும் இது பொன்மம்(உலோகம்) நிறைந்தது Fe/H விகிதம் 0.310 ஆகும். இந்த விண்மீன் 1.14552 சூரியப் பொருண்மையளவு துல்லியமான பொருண்மை கொண்டது. இந்த துல்லியமானது வான்நடுக்கவியலை அளவிடும் கோரோட் பணியிலிருந்து வருகிறது.

கோள் அமைப்பு

[தொகு]

2006 ஜூலையில், எதிப 66428 பி என்ற புறக்கோளின் கண்டுபிடிப்பு வானியற்பியல் இதழில் வெளியிடப்பட்டது. இது ஆர விரைவு முறையைப் பயன்படுத்தி WM கெக் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட நோக்கீடுகளிலிருந்து கண்டறியப்பட்டது. இது வியாழனை விட 3 மடங்குக்கும் அதிகமான பொருண்மையைக் கொண்டுள்ளது. மேலும் இது விண்மீனிலிருந்து 3.47 வானியல் தொலைவில் சுற்றிவருகிறது.[2][5]


2015 ஆம் ஆண்டில், ஒரு சீரான வட்டணை தீர்மானிக்கப்பட்டது, இது ஆரத் திசைவேகங்களில் ஒரு நேரியல் போக்கைக் கண்டறிய வழிவகுத்தது. இது அறியப்படாத தன்மையின் மிகவும் நெடுந்தொலைவு இணையைக் குறிக்கிறது, இது 2021 இல் வளிமக் கோளான எதிப 66428 சி அல்லது பழுப்பு குறுமீனாக இருக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. [6] 2022 ஆம் ஆண்டில், இரண்டு கோள்களின் சாய்வும் உண்மையான பொருண்மையும் வானளவியல் வழி அளவிடப்பட்டது. c கோளின் வட்டணைக் காலம், பொருண்மை ஆகியவை முந்தைய உயர்-பிழை மதிப்பீடுகளைக் காட்டிலும் கணிசமாகக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது கோள்களின் பொருண்மையே தவிர, குறுமீன் அன்று என்பதை உறுதிப்படுத்தியது.

எச்டி 66428 தொகுதி[7]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(year)
வட்டவிலகல்
b 10.946+2.442
−3.845
 MJ
3.395+0.141
−0.157
6.214+0.015
−0.016
0.471±0.012
c 1.764+3.404
−0.041
 MJ
9.408+1.945
−1.267
28.690+9.206
−5.348
0.207+0.097
−0.098

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Butler, R. P. et al. (2006). "Catalog of Nearby Exoplanets". The Astrophysical Journal 646 (1): 505–522. doi:10.1086/504701. Bibcode: 2006ApJ...646..505B. 
  3. Kashyap, V.L. et al. (2008). "Extrasolar Giant Planets and X-Ray Activity". Astrophysical Journal 687 (2): 1339–1356. doi:10.1086/591922. Bibcode: 2008ApJ...687.1339K. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Bonfanti, A. et al. (2015). "Revising the ages of planet-hosting stars". Astronomy and Astrophysics 575: A18. doi:10.1051/0004-6361/201424951. Bibcode: 2015A&A...575A..18B. http://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa24951-14/aa24951-14.html. 
  5. Feng, Y. Katherina et al. (2015). "The California Planet Survey IV: A Planet Orbiting the Giant Star HD 145934 and Updates to Seven Systems with Long-period Planets". The Astrophysical Journal 800 (1): 22. doi:10.1088/0004-637X/800/1/22. Bibcode: 2015ApJ...800...22F. 
  6. Rosenthal, Lee J.; Fulton, Benjamin J.; Hirsch, Lea A.; Isaacson, Howard T.; Howard, Andrew W.; Dedrick, Cayla M.; Sherstyuk, Ilya A.; Blunt, Sarah C.; Petigura, Erik A. (2021), "The California Legacy Survey. I. A Catalog of 178 Planets from Precision Radial Velocity Monitoring of 719 Nearby Stars over Three Decades", The Astrophysical Journal Supplement Series, p. 8, arXiv:2105.11583, Bibcode:2021ApJS..255....8R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-4365/abe23c {{citation}}: Missing or empty |url= (help)
  7. Feng, FaboExpression error: Unrecognized word "etal". (August 2022). "3D Selection of 167 Substellar Companions to Nearby Stars". The Astrophysical Journal Supplement Series 262 (21): 21. doi:10.3847/1538-4365/ac7e57. Bibcode: 2022ApJS..262...21F. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "Notes for star HD 66428". The Extrasolar Planets Encyclopaedia. அணுகப்பட்டது 2008-08-20.