எச். எம். எசு எண்டர்பிரைசு (1848) (இடது), எச்.எம்.எசு இன்வெஸ்டிகேட்டர் (வலது)
| |
கப்பல் (ஐஇ) | |
---|---|
பெயர்: | எச்.எம்.எசு இன்வெஸ்டிகேட்டர் |
கட்டியோர்: | ஸ்கொட், கிரீனொக்[1] |
செலவு: | £25,337[1] |
வாங்கியது: | பெப்ரவரி 1848 |
விதி: | 3 ஜூன் 1853 இல் கைவிடப்பட்டது |
குறிப்பு: | ஆர். மற்றும் எஹ். கிரீன் என்பவரால் ஆர்க்டிக் சேவைகளுக்காக அமைக்கப்பட்டது[1] |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | தேடுதல் கலம் |
Tons burthen: | 422[1]–480[2] தொன்கள்) |
நீளம்: | 118 அடி 0 அங் (35.97 m)[1] |
வளை: | 28 அடி 3 அங் (8.61 m)[1] |
கிடங்கின் ஆழம்: | 18 அடி 11 அங் (5.77 m)[1] |
எச். எம். எசு இன்வெஸ்டிகேட்டர் (HMS Investigator) என்பது சர் ஜோன் பிராங்கிளின் என்பவரின் காணாமல் போன நாடுகாண் பயணக் கப்பலைத் தேடுவதற்காக 1848 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட ஒரு வணிகக் கப்பலாகும். இக்கப்பல் ஆர்க்டிக் பகுதியை நோக்கி இரண்டு முறை பயணித்தது. 1853 ஆம் ஆண்டில் பனியினுள் சிக்குண்டதில் இக்கப்பல் கைவிடப்பட்டது. இக்கப்பலின் சிதைவுகள் ஜூலை 2010 இல் போஃபேர்ட் கடலில் உள்ள பாங்க்ஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது[3]. இப்பெயரில் பிரித்தானியக் கடற்படையில் இருந்த நான்காவது கப்பல் இதுவாகும்.
1848 இன் கடைசியில், இக்கப்பல் எச்.எம்.எசு என்டர்பிரைஸ் (1948) என்ற கப்பலுடன் இணைந்து காணாமல் போன சேர் ஜோன் பிராங்கிளினைத் தேடி ஆர்க்டிக் நோக்கிப் பயணித்தது. இயற்கையியலாளர் எட்வர்ட் ஜேம்ஸ் என்பவரும் இப்பயணத்தில் இணைந்திருந்தார். இன்வெஸ்டிகேட்டர் கப்பலுக்கு ராபர்ட் மக்குளூர் என்பவர் தலைவராகப் பணியாற்றினார்[4]. இக்கப்பல் பனிக்கட்டியினுள் புதையுண்டதை அடுத்து 1853 ஜூன் 3 இல் மேர்சி குடாவில் கைவிடப்பட்டது[1].
இக்கப்பல் கைவிடப்பட்ட பகுதியை அடைவதற்கு மிகவும் சிரமமாக இருந்ததாலும், எப்போதும் அது பனிக்கட்டிகளினால் மூடப்பட்டிருந்தமையினாலும், அது எங்கு கைவிடப்பட்டது என்பது பற்றி 150 ஆண்டுகளாக எதுவும் அறியப்படவில்லை[5].
இனூயிட் பழங்குடியினர் இக்கப்பலைப் பற்றிப் பல கதைகளைச் சொல்வார்கள். இக்கப்பலில் இருந்த செப்பு, மற்றும் இரும்பு போன்றவற்றைத் தாம் பாவித்ததாக இவர்கள் கூறுவார்கள்[5].
ஜூலை 2010 இல் கனடாவின் "பார்க்ஸ் கனடா" என்ற அரசு ஆய்வு நிறுவனத்தின் தொல்லியலாளர்கள், அறிவியலாளர்கள் குழு மேர்சி குடாவில் தேடுதலை மேற்கொண்டனர்[6][7]. ஜூலை 22 இல் இக்குழு பாங்க்ஸ் தீவை அடைந்தது. மூன்று நாட்களின் பின்னர் அவர்கள் ஆழ்கடல் தேடுதலை மேற்கொண்டு கப்பலை எட்டு மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்தனர்[5].
தொடர்பான செய்திகள் உள்ளது.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)