எஜ்யா யாதவ் Ejya Yadav | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2015–2020 | |
முன்னையவர் | அஜய் குமார் புல்கானின் |
பின்னவர் | இராஜேஷ் குமார் சிங் |
தொகுதி | மொகைதீன்நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூலை 1971 இரசூல்பூர் மொகைதீன்நகர், பீகார் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
எஜ்யா யாதவ் (Ejya Yadav)(பிறப்பு: ஜூலை 15, 1971) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கல்வியாளரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராகமொகியுதீன்நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] முன்னதாக, பாட்னா மகளிர் கல்லூரியில் பேராசிரியராக இருந்துள்ளார்.
யாதவ் தனது பள்ளிப்படிப்பை ராஞ்சி லொரேட்டோ பள்ளியிலும் பாட்னா நோட்ரே தேமிலும் பயின்றார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, பாட்னா மகளிர் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் தலைவராக இருந்தார்.[2]
2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலின் போது, மொகியுதின்நகர் தொகுதிக்கு இராச்டிரிய ஜனதா தள வேட்பாளராக, போட்டியிட்ட எஜ்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இந்த தேர்தலில் இவர் தனது தனக்கு அடுத்தபடியாக வந்த சுயேச்சை வேட்பாளரான ராஜேஷ் சிங்கை 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4]
எஜ்யா யாதவ் இந்த தேர்தல் மூலம் கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்றார். இவர் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். குறிப்பாகக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டதிலிருந்து, கட்சியின் பார்வையைப் பத்திரிகையாளர்கள் மற்றும் அடிமட்ட மக்களுக்கு வெளிப்படுத்தக்கூடிய ஒருவராக இவர் காணப்படுகிறார். ராஞ்சி சிறையில் லாலுவைச் சந்தித்து கட்சி விஷயங்களைப் பற்றி விவாதிக்க வந்த கட்சித் தலைவர்களில் இவரும் ஒருவர்.[5]
இவர் 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் மொகியுதீன்நகரின் வேட்பாளராகப் போட்டியிட்டு பாஜக ராஜேஷ் குமார் சிங்கிடம் தோற்றார்.[6][7]