எட்டிமடை | |||||
— கோயம்புத்தூர் புறநகர் — | |||||
ஆள்கூறு | 10°53′52″N 76°54′14″E / 10.8978°N 76.9038°E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||
வட்டம் | மதுக்கரை | ||||
அருகாமை நகரம் | மதுக்கரை | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | |||||
மக்கள் தொகை • அடர்த்தி |
9,352 (2011[update]) • 569/km2 (1,474/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 16.44 சதுர கிலோமீட்டர்கள் (6.35 sq mi) | ||||
குறியீடுகள்
|
எட்டிமடை (ஆங்கிலம்:Ettimadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். புகழ்பெற்ற அமிர்தா பல்கலைக்கழக வளாகம் எட்டிமடையில் அமைந்துள்ளது. எட்டிமடையில் ரயில் நிலையம் உள்ளது.[3][4][5]
இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மதுக்கரை 8 கி.மீ.; மாவூத்தம்பட்டி 3 கி.மீ.; பூளுவப்பட்டி 8 கி.மீ.; பிச்சனூர் 3 கி.மீ. பாலக்காடு 40 கி.மீ தொலைவில் உள்ளன.
16.44 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,564 வீடுகளும், 9,352 மக்கள்தொகையும் கொண்டது.[7] [8]