எமிலி சாஜா | |
---|---|
பிறப்பு | அங்கேரி | 15 சூலை 1909
இறப்பு | 16 மே 1970 சிங்கப்பூர் | (அகவை 60)
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை | |
மற்போர் பெயர் | கிங் காங் |
Billed height | 6 அடி |
Billed weight | 444 lb (201 kg) (201கிலோ) |
Billed from | ஆத்திரேலியா |
முதல் போட்டி | 1937 |
கிங் காங் என்ற புனைபெயரால் அறியப்படும் எமிலி சாஜா (Emile Czaja, 15 சூலை 1909-16 மே 1970) என்பவர் ஒரு ஆத்திரேலிய-இந்திய தொழில்முறை மல்யுத்த வீரரும் நடிகரும் ஆவார். இவர் 1909 இல் அங்கேரியில் பிறந்தவர். 1929 முதல் 1970 வரை மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக இருந்தார். இவர் பெரும்பாலும் யப்பான், சிங்கப்பூர், ஐரோப்பா, நியூசிலாந்து, ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் மல்யுத்தம் செய்தார். தொழில்முறை மல்யுத்தத்தில், இவரது பரம போட்டியாளர்களாக அஸ்லம் பஹல்வான்,[1] ஹமிதா பஹல்வான், ஷெய்க் அலி, தாரா சிங் ஆகியோர் இருந்தனர்.[2][3]
அங்கேரிய நாட்டைச் சேர்ந்த எமிலி சாஜா ஐரோப்பாவில் மல்யுத்தம் செய்யத் தொடங்கினார். 18 வயதில், இவர் ஐரோப்பா முழுவதும் முக்கியமான போட்டிகளில் பங்கேற்றார். எமிலி மல்யுத்தத்தின் அனைத்து பாணிகளிலும் சிறந்து விளங்கினார். இதனால் விரைவில் சிறந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு வலிமையான எதிரியாக மாறினார்.
சாஜா 1937 இல் இந்தியாவில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] ஒரு இந்திய திரைப்படத்தில் கிங் காங் பாத்திரத்தில் நடித்ததால் இவருக்கு "கிங் காங்" என்ற பெயர் வழங்கப்பட்டது.[2] 1945 இல், இவர் பிரித்தானிய இந்தியாவின் இலாகூரில் சுமார் 200,000 பார்வையாளர்கள் முன்னிலையில் ஹமிதா பெஹல்வானுடன் மல்யுத்தம் செய்தார்.[4] இவர் 100,000 இக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்காக அடிக்கடி மல்யுத்தம் செய்தார்.[4]
1937 ஆம் ஆண்டில், இவர் பிரித்தானிய இந்தியாவின் பம்பாய்க்கு வந்தார். அங்கு பல மேற்கத்திய மல்யுத்த வீரர்களுடனும், கிழக்கு இந்திய ஜாம்பவான்களுடன் மோத கூடியிருந்தனர். அவர்கள் பாலஸ்தீனத்தின் ஜெஜி கோல்ட்ஸ்டைன், ஜெர்மனியின் எட்மண்ட் வான் கிராமர், இத்தாலியின் டோனி லாமரோ, அங்கேரியின் எமில் கொரோஷென்கோ, போலந்தின் ஜார்ஜ் ஜிபிஸ்கோ, ருமேனியாவின் ஜார்ஜ் கான்ஸ்டன்டைன், ஆத்திரேலியாவின் ஆர்ட்டி கவுன்சில், எட்" ஸ்ட்ராங்க்லர் " லூயிஸ், டெட் தை ஆகியோராவர். கிங் காங் அவர்களில் சிலருடன் மல்யுத்தம் செய்தார்.
1947 இக்குப் பிறகு, மற்றொரு நாடாக பாக்கித்தான் உருவானது. உடனடியாக அங்கு வலுவான மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டார். 1952 ஆம் ஆண்டில், எமிலி சாஜா சிங்கப்பூரில் இருந்து பம்பாய்க்கு வந்து, "தி மேட் மொகுல் ஆஃப் இந்தியா" என்ற புகழ்பெற்ற தொழிலதிபர் திரு. கூஸ்டாட் டி. இரானியை அணுகினார். அதன்பிறகு பம்பாயில் ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வருவாயைத் தந்தது. 1960 களின் பிற்பகுதி வரை இரானியின் குத்தகையின் கீழ் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மல்யுத்தம் நடந்தது.
தாரா சிங் உடனான இவரது அனைத்து சண்டைகளும், இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுமக்களின் கற்பனைக் கதைகளுக்குத் தீனிபோட்டன. கிங் காங்கை வீழ்த்திய தாரா சிங்கின் செயல் இந்தியாவில் புகழ்பெற்றது.[5]
மலேசியாவின் பினாங்கில் நடந்த ஒரு போட்டியை முடித்து சிங்கப்பூருக்குத் திரும்பிச் செல்லும்போது, 1970 மே 12 அன்று ஐபோவில் நடந்த கார் விபத்தில் சாஜா மோசமாக காயமடைந்தார். இதனையடுத்து 1970 மே 16 அன்று சிங்கப்பூரில் 60 தன் வயதில் இறந்தார்.[2]
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1953 | பொன்னி | அவராகவே | தமிழ்ப் படம் |
1962 | கிங் காங் | கிங் காங் | இந்தி திரைப்படங்கள் |
ஹாங்காங் | |||
1963 | படால் நாக்ரி | ||
கார்னிவல் கிங் | |||
ஃபௌலாத் | அடிமைத் தலைவன் | ||
1964 | குஃபியா மஹால் | மல்யுத்த வீரர் | |
சாம்சன் | |||
ஹெர்குலஸ் | மல்யுத்த வீரர் | ||
ஆயா தூபன் | மல்யுத்த வீரர் | ||
1965 | டார்சன் அண்ட் கிங் காங் | டார்சனின் எதிரி | |
சங்கிராம் | |||
ஹம் சப் உஸ்தாத் ஹெய்ன் | கிங் காங் மல்யுத்த வீரர் | ||
1968 | முஜ்ரிம் கவுன்? | ||
1972 | மெலே மித்ரன் டி | பஞ்சாபி படம் |