எம்டீ தரங்குறைத்தல் வினை | |
---|---|
பெயர் மூலம் | எர்மான் எம்டீ |
வினையின் வகை | சிதைவு வினை |
இனங்காட்டிகள் | |
RSC சுட்டெண் | RXNO:0000147 |
எம்டீ தரங்குறைப்பு வினை (Emde degradation) என்பது நான்கிணைய அமோனியம் நேர் மின்னயனியை சோடியம் இரசக்கலவையுடன் சேர்ந்த மூவிணைய அமீனாக ஒடுக்கும் வினையாகும். இவ்வினையை எம்டீ-ஒடுக்க வினை என்றும் எம்டீ வினையென்றும் அழைப்பார்கள்[1][2][3]
.
இக்கரிம வினையை முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு செருமானிய வேதியியலாளர் எர்மான் எம்டீ கண்டறிந்தார். பல ஆல்கலாய்டுகளின் கட்டமைப்புக்கு விளக்கமளிக்க இவ்வினை நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்பட்டது. உதாரணம்: எபிடிரைன். இவற்றைத் தவிர இலித்தியம் அலுமினியம் ஐதரைடு போன்ற பல வினையொடுக்க முகவர்கள் வினையை தரங்குறைக்கின்றன.