எம். கே. சரோஜா | |
---|---|
பிறப்பு | 7 ஏப்பிரல் 1931 சென்னை |
இறப்பு | 2022 |
மெட்ராஸ் கதிரவேலு சரோஜா (Madras Kadiravelu Saroja), என்ற இவர் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தின் பாரம்பரிய நடன வடிவத்தில், ஒரு நிபுணராகவும், ஒரு ஆசிரியராகவும் அறியப்பட்டவர். கலை மற்றும் கலாச்சாரத் துறையில் இவர் செய்த சேவைகளுக்காக, 2011 ஆம் ஆண்டில், நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதினை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.[1]
எம்.கே.சரோஜா 1931 ஏப்ரல் 7, அன்று இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னையில் (முந்தைய மெட்ராஸ்) பிறந்தார். நன்கு அறியப்பட்ட பாரம்பரிய நடன ஆசிரியரும், மிருணாளினி சாராபாய் மற்றும் கமலா லட்சுமண் போன்ற பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்களுக்குக் கற்பித்த ருக்மிணி தேவி அருண்டேலின் கலாசேத்திராவின் முதல் நடன ஆசிரியருமான முத்துகுமரன் பிள்ளையின் பயிற்சியின் கீழ், தனது சகோதரியுடன், ஐந்து வயதில், இவர் நடனத்தைக் கற்கத் தொடங்கினார். சிறுவயது சரோஜா பெங்களூரில் உள்ள பெங்களூர் ஸ்டுடியோவில் சேர பெங்களூருக்குச் சென்றபோது தனது ஆசிரியரைப் பின்தொடர்ந்தார்.[2]
சரோஜா 1940 இல் அறிமுகமானார். பின்னர், ஒரு பிரபலமான நடனக் கலைஞரானார். 1946 ஆம் ஆண்டில், சென்னையில் உள்ள ஜெமினி ஸ்டுடியோஸால் இவருக்கு திரைப்பட ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதை இவர் நிராகரித்தார். மூன்று ஆண்டுகள் கழித்து, திசம்பர் 1949, புகழ்பெற்ற கலை வரலாற்று ஆசிரியர் மற்றும் நடனம் அறிஞர் மோகன் கோக்கார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[3][4] மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நடனத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டபோது, கலாசேத்திராவில் இணை மாணவரானார். மேலும், இவரது கணவரைத் தொடர்ந்து இவரும் பரோடாவுக்குச் சென்றார்.[2] பரோடாவில், குறிப்பிடத்தக்க கதக் குருக்களான சுரோஜர் சுந்தர்லால் மற்றும் குந்தன்லால் கங்கனியிடமிருந்து கதக்கைக் கற்றுக்கொண்டார்.
1961 ஆம் ஆண்டில், மோகன் கோக்கர் சங்கீத நாடக அகாதமியில் நடனத்திற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும் இந்த இணை புதுதில்லிக்கு குடிபெயர்ந்தது. அங்கு, இவர் கற்பித்தலை மீண்டும் தொடங்கினார். மேலும் நடன நிகழ்ச்சிகளையும் தொடர்ந்தார். குடியரசுத் தலைவர் இல்லத்தில், வருகை தநத சவுதி அரேபிய ஆட்சியாளருக்கு முன்னால் நடன நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்கான வாய்ப்பைப் பெற்றார். 1970 முதல், இவர் பாரிஸில் உள்ள மைய மண்டபத்தில் மேற்பார்வையிடத் தொடங்கினார். அங்கு மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக 2000 ஆம் ஆண்டு வரை அவர் தொடர்ந்தார்.[2]
எம்.கே.சரோஜா தனது கணவரின் மரணத்தைத் தொடர்ந்து 40 ஆண்டு நடனச்செயல்களில் கழித்த பிறகு 2000 ஆம் ஆண்டில் தொழில்முறை நடனத்திலிருந்து ஓய்வு பெற்றார்.[2] இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்களில் மூன்றாவது மகன் ஆஷிஷ் மோகன் கோக்கர் ஒரு பிரபலமான கலை வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும் மற்றும் நடன விமர்சகரும் ஆவார்.[5] இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
எம்.கே.சரோஜாவின் ஆளுமை இவர் பரதநாட்டியத்திற்குள் கொண்டுவரப்பட்ட தூய்மையாக இருந்து வருகிறது. மேலும் நர்கிஸ் கட்ட்பிட்டியா, பிரதிபா பண்டிட், சுதா படேல், லக்ஷ்மி வல்ரானி, இந்திராணி ரெஹ்மான், யாமினி கிருஷ்ணமூர்த்தி, ரோமானா அக்னெல்,[6] ஷோபனா ராதாகிருஷ்ணா, ரசிகா கன்னா, அருப் கோஷ், லூசியா மலோனி, மிலேனா சால்வினி மற்றும் வித்யா. கடைசி இரண்டு நடனக் கலைஞர்கள் பாரிஸின் மைய மண்டபத்தில் இன்றும் கற்பிக்கிறார்கள்.
எம்.கே.சரோஜா இவரைப்பற்றி இரண்டு ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒன்று அரங்கத்துறை, உரோம் பல்கலைக்கழகம் மற்றும் இன்னொன்று கிளவுட் லாமோரைஸ் என்பதாகும்.[2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)