எம். ஜி. ஆர். நகர் | |
---|---|
வசிப்பிடம் | |
ஆள்கூறுகள்: 13°02′06″N 80°11′49″E / 13.035°N 80.197°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
பெருநகரம் | சென்னை |
வார்டுகள் | 137 & 138 |
பெயர்ச்சூட்டு | முன்னாள் முதலமைச்சர் (எம். ஜி. இராமச்சந்திரன்) |
அரசு | |
• நிர்வாகம் | சென்னை பெருநகர மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
மக்களவை தொகுதி | சென்னை தெற்கு |
சட்டமன்றத் தொகுதி | விருகம்பாக்கம் |
நகரத் திட்டமிடல் epWtdk; | சி. எம். டி. ஏ |
அரசு epWtdk; | சென்னை மாநகராட்சி |
இணையதளம் | www |
எம். ஜி. ஆர் நகர் (MGR Nagar எம்.ஜி. ராமச்சந்திரன் நகரிலிருந்து சுருக்கப்பட்டது) என்பது இந்தியாவின் சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு சுற்றுப்பகுதியாகும்.[1] இப்பகுதியானது காய்கறி சந்தை மற்றும் மீன் சந்தைக்கு பெயர் பெற்றது.[2]
இது, சென்னை கே.கே.நகரில் அண்ணா முக்கிய சாலையின் தெற்கே அமைந்துள்ளது. இது வடக்கில் கே.கே நகர், மேற்கில் நெசப்பாக்கம், தெற்கில் அடையாறு ஆறு மற்றும் தென்கிழக்கில் ஜாபர்கான்பேட்டை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
கே. கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அல்லது நிறுத்தப்படும் அனைத்து மாநகரப் பேருந்துகளும், அண்ணா முக்கியச் சாலையில் உள்ள எம். ஜி. ஆர் நகரின் மூன்று பேருந்து நிறுத்தங்கள் வழியாகச் செல்கின்றன. [3]
எம்ஜிஆர் நகர் காவல் நிலையம் (R10) வெங்கட்ராமன் சாலையில் அமைந்துள்ளது. [4]
2005 அக்டோபரில் வெள்ள நிவாரணம் வழங்குவதற்காகக் கூடியிருந்த 4000 பேரில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். [5]