எம். ஜெயசந்திரன்

எம். ஜெயசந்திரன்
கேரளா பல்கலைக்க்ழகம், கரியவட்டம் வளாகத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் எம். ஜெயசந்திரன், 2013
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஜெயசந்திரன் மதுசூதன் நாயர்
பிற பெயர்கள்எம் ஜே
பிறப்பு14 சூன் 1971 (1971-06-14) (அகவை 53), திருவனந்தபுரம், கேரளம்
பிறப்பிடம்திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
தொழில்(கள்)இசை இயக்குநர், பின்னணி பாடகர்
இசைத்துறையில்1993–தற்போது வரை

மதுசூதன் நாயர் ஜெயச்சந்திரன் ( Madhusoodanan Nair Jayachandran) எம். ஜெயச்சந்திரன் என்று அழைக்கப்படும் இவர் இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார். சிறந்த இசை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதை ஏழு முறை பதிவு செய்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், சிறந்த ஆண் பாடகருக்கான மாநில விருதையும் வென்றார். 2015 ஆம் ஆண்டில், என்னு நிண்டே மொய்தீன் படத்திற்காக சிறந்த இசை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

சுயசரிதை

[தொகு]

ஜெயச்சந்திரன் சூன் 14, 1971 அன்று திருவனந்தபுரத்தில் பிறந்தார் .[1][2] இவர் தனது 5 வயதில் ஆற்றிங்கல் அரிகர ஐயரின் கீழ் கருநாடக இசையை கற்கத் தொடங்கினார். பின்னர் பெரும்பாவூர் ஜி. இரவீந்திரநாத்தின் கீழ் பயின்றார்.[3] அதன்பிறகு, இவர் 18 ஆண்டுகளாக நெய்யாற்றிங்கரை மோகனச்சந்திரனின் மாணவராக இருந்தார். 1987 முதல் 1990 வரை கேரள பல்கலைக்கழக இளைஞர் விழாவில் கர்நாடக குரல் போட்டியில் தொடர்ச்சியாக நான்கு முறை வென்றார். திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார்.

1992 ஆம் ஆண்டில் "வசுதா" என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகராக திரைத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மலையாள இசை இயக்குநர் ஜி.தேவராஜனின் உதவியாளரானார்.[4] 1995 இல், சாந்தா என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சுயாதீன இசை இயக்குனரானார்.

"பச்ச பணம் தாதே" என்ற பாடலை பாடும் எம்.ஜெயச்சந்திரன்

சொந்த வாழ்க்கை

[தொகு]

மறைந்த மதுசூதனன் நாயர் (இறப்பு 2014) மறைந்த விஜயா நாயர் (இறப்பு 2009) ஆகியோருக்கு பிறந்த இரு மகன்களில் ஜெயச்சந்திரன் இளையவர். 14 சூன் 1971 இல் பிறந்தார். இவருக்கு பிரகாஷ் சந்திரன் என்ற மூத்த சகோதரர் உள்ளார். இசையை ஒரு முழுநேர தொழிலாக எடுப்பதற்கு முன்பு இவர் ஏசியானெட்டில் பணியாற்றினார்.[4] இவர் நவம்பர் 12, 1995 அன்று பிரியா என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[5]

குறிப்புகள்

[தொகு]
  1. "1".
  2. "2".
  3. "Scaling peaks of success". The Hindu. Archived from the original on 2013-12-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28.
  4. 4.0 4.1 "Scaling peaks of success". The Hindu. Archived from the original on 2013-12-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-28."Scaling peaks of success" பரணிடப்பட்டது 2013-12-19 at the வந்தவழி இயந்திரம். The Hindu.
  5. "Seasoned culinary managers". The Hindu.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
M. Jayachandran
என்பதில் ஊடகங்கள் உள்ளன.