எம். வேலுகுமார்

எம். வேலு குமார்
M. Velu Kumar
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2015
கண்டி மாவட்ட மத்திய மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2013 – ஆகத்து 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சனவரி 1973 (1973-01-16) (அகவை 51)
அரசியல் கட்சிஜனநாயக மக்கள் முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சக்தி
வாழிடம்கண்டி
முன்னாள் கல்லூரிகொழும்புப் பல்கலைக்கழகம்
வேலைஆசிரியர்

எம். வேலுகுமார் (பிறப்பு: 16 சனவரி 1973) இலங்கை, மலையகத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்..[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

வேலுகுமார் 1973 சனவரி 16 இல் பிறந்தார்.[1] தலத்துஓயா தமிழ் மகா வித்தியாலயம், கண்டி அசோகா வித்தியாலயம், கண்டி சில்வெஸ்டர் கலூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர்[2] பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்று,[2] ஆசிரியராகப் பணியாற்றினார்.

அரசியலில்

[தொகு]

வேலுகுமார் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஆவார்.[3][4] இவர் 2015 இல் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[5]

வேலுகுமார் 2013 மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு மத்திய மாகாணசபை உறுப்பினரானார்.[6][7] பின்னர் இவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[8][9][10] மீண்டும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகக் கண்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்..[11][12]

தேர்தல் வரலாறு

[தொகு]
எம். வேலுகுமாரின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2013 மாகாணசபை[7] கண்டி மாவட்டம் ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய முன்னணி 18,159 தெரிவு
2015 நாடாளுமன்றம்[9] கண்டி மாவட்டம் ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய முன்னணி 62,556 தெரிவு
2020 நாடாளுமன்றம்[12] கண்டி மாவட்டம் ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய மக்கள் சக்தி 57,445 தெரிவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Directory of Members: Velu Kumar". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 13 September 2020.
  2. 2.0 2.1 "New members of Parliament". Sunday Times (Colombo, Sri Lanka). 30 August 2015. http://www.sundaytimes.lk/150830/news/after-the-polls-the-calm-remains-except-for-a-few-incidents-say-monitors-162447.html. பார்த்த நாள்: 13 September 2020. 
  3. "Tamil Progressive Alliance Ties Up With UNP In Lankan Polls". Asian Mirror. 11 July 2015 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304114842/http://www.asianmirror.lk/news/item/9981-tamil-progressive-alliance-ties-up-with-unp-in-lankan-polls. பார்த்த நாள்: 13 September 2020. 
  4. "I will visit Valigamam North high security zone if army shoot me. I’m proud to die on this land: Wigneswaran". Lankasri News. 6 December 2013 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304061353/http://eng.lankasri.com/view.php?24cAYnPd224oKBnbde2coOd7ec02CWA40ed04AMeC2aae7lAc324bnZmA430cdP5OKc2. 
  5. "Tamil Progressive Alliance elects working committee". Eye Sri Lanka. 5 June 2015. http://www.eyesrilanka.com/2015/06/05/tamil-progressive-alliance-elects-working-committee/. பார்த்த நாள்: 13 September 2020. 
  6. "Part I : Section (I) — General - Government Notifications - Provincial Councils Elections Act, No. 2 OF 1988 - Central Province Provincial Council" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1829/33. Colombo, Sri Lanka. 25 September 2013. p. 2A. பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
  7. 7.0 7.1 "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Central Province". Daily Mirror (Colombo, Sri Lanka). 25 September 2013. http://www.dailymirror.lk/article/provincial-council-elections-2013-results-and-preferential-votes-central-province-36076.html. பார்த்த நாள்: 13 September 2020. 
  8. "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1928/3. Colombo, Sri Lanka. 19 August 2015. p. 3A. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015.
  9. 9.0 9.1 "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 13 September 2020. 
  10. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 13 September 2020. 
  11. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981 3" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 3A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  12. 12.0 12.1 "General Election 2020: Preferential votes of Kandy District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027095336/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-kandy-district. பார்த்த நாள்: 13 September 2020.