ஏர்ன்ஸ்ட் கே. ஜின்னர் | |
---|---|
பிறப்பு | ஸ்டெயர், ஆஸ்திரியா | சனவரி 30, 1937
இறப்பு | சூலை 30, 2015 செயின்ட் லூயிஸ், மிசோரி | (அகவை 78)
தேசியம் | ஆஸ்திரியர் |
கல்வி | வியன்னா தொழிநுட்பக்கழகம் வாஷிங்டன் பல்கலைக்கழகம், செயின்ட் லூயிஸ் |
பணி | வானியற்பியல் |
எர்ன்ஸ்ட் குனிபர்ட் ஜின்னர் (Ernst Kunibert Zinner) (30 ஜனவரி 1937 - 30 ஜூலை 2015) ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவைச் சேர்ந்த வானியற்பியல் நிபுணர் ஆவார். ஆய்வகத்தில் நட்சத்திர தூசியின் பகுப்பாய்வில் இவரது முன்னோடி பணிக்காக அறியப்பட்டவர்.[1] அமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி இயற்பியலுக்கான ஆய்வகத்தில் (பின்னர் மெக்டோனல் விண்வெளி அறிவியல் மையத்தின் ஒரு பகுதி) இவர் அமெரிக்காவில் ஒரு பதவியில் இருந்தார்.[2] அங்கு முனைவர் பட்டம் பெற்றார். 1960களில் பட்டதாரி பணிக்காக அமெரிக்கா வந்தார். கூடுதலாக, தொடர்ந்து ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்களில் கற்பித்தார்.[3][4]
ஜின்னர் ஆஸ்திரியா வியன்னாவிற்கு மேற்கே 100 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய நகரமான ஸ்டெய்ரில் ஜனவரி 30 , 1937 அன்று பிறந்தார்.[1] இவரது தந்தை, குனிபர்ட் ஜின்னர், ஒரு புகழ்பெற்ற சிற்பி என்றாலும், எர்ன்ஸ்ட் ஒரு சிறுவனாக இயற்கை மற்றும் அறிவியலில் அதிக ஆர்வம் காட்டினார்.[1] ஜின்னரின் நான்கு இளைய உடன்பிறப்புகள் மற்றும் பிற உறவினர்கள் ஆஸ்திரியாவில் வசிக்கின்றனர்.
இவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஓய்வு காலத்தில், வியன்னாவில் உள்ள பகுப்பாய்வு வேதியியல் நிறுவனத்தின் ஆசிரிய உறுப்பினரான பிரிஜிட் வோபென்காவை சந்தித்தார். அவர் இவருடன் அமெரிக்காவிற்கு திரும்பினார். இருவரும் 1980 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மேக்ஸ் கியாகோபினி ஜின்னர் என்ற மகன் இருந்தார். மகன் இப்போது நியூயார்க் நகரில் வசிக்கிறார்.[2]
ஜின்னரின் முனைவர் பட்ட ஆராய்ச்சி துகள் இயற்பியலில் இருந்தது. அணு துகள் தடங்கள், மைக்ரோமெட்டோயிட் பள்ளங்கள் மற்றும் சூரியக் காற்றில் உள்ள தனிமங்களைப் பயன்படுத்தி, சூரியக் குடும்பத்திற்குள் சுற்றுச்சூழலால் சந்திரன் மற்றும் எரிவெள்ளிகளில் ஏற்படும் விளைவுகளை இவர் பின்னர் ஆய்வு செய்தார்.[4] இவரது பிற்கால ஆராய்ச்சியானது ஆரம்பகால விண்வீழ்கல்களால் சுமந்து செல்லப்பட்ட சூரிய முன் துகள்களில் உள்ள தகவல்களில் கவனம் செலுத்தியது. இந்தத் துகள்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியே வளிமண்டலங்கள் மற்றும் நட்சத்திரங்களின் வெடிப்புகளில் உருவாக்கப்பட்டன. அவை நட்சத்திர அணுக்கருத் தொகுப்பின் வரலாறு மற்றும் சூரியக் குடும்பத்தின் உருவாக்கம் பற்றிய தகவல்களை வழங்க முடியும்.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)