எலிசா வில்பர் Eliza Wilbur | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 21, 1851 |
இறப்பு | மார்ச்சு 31, 1930 |
மற்ற பெயர்கள் | எபன் மால்கம் சட்கிளிஃபு |
படித்த கல்வி நிறுவனங்கள் | படாவியா பிமேல் செமினரி |
பணி | வானியலாளர், தாவரவியலாளர், கண்டுபிடிப்பாளர் |
அறியப்படுவது | இவரது காப்புரிமைகளில் மூன்று தொலைநோக்கிகள் அடங்கும் |
வாழ்க்கைத் துணை | 1. தாமசு பாசுனெட்டு 2. மாத்தியூ சோவில்லே |
எலிசா மதேலினா வில்பர் சவுர்வீல்லி (Eliza Madelina Wilbur Souvielle) (அக்தோபர் 21, 1851 - மார்ச்சு 31, 1930[1]) ஓர் அமெரிக்க பெயர்பெற்ற அறிவியலாளரும் வானியலாளரும் தாவரவியலாளரும் புதுமைப்புனைவாளரும், எழுத்தாளரும் வெளியீட்டாளரும் ஆவார்.[2]
இவர் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பதாவியா மகளிர் துறவிமடத்தில் படித்தார். இவர் தான் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியலில் விரிவுரையாற்றிய முதல் பெண்மணி ஆவார். இவர் அமெரிக்க அறிவியல் மேம்ப்பட்டுக் கழக உறுப்பினரும் ஆவார். இவர்து கட்டுரைகள் Scientific American , New York Herald ஆகிய இதழ்களிலும் செய்தித்தள்களிலும் வெளியாகியுள்ளன. இவர் Continuity (magazine) எனும் இதழை வெளியிட்டுள்ளார்.[3]
இவர் தாமசு பாசுனெட்டை மணந்ததும் 1880 இல் மரபனாங்குக்கு இடம்பெயர்ந்தார். அவர் 1886 இல் இறந்ததும் தொண்டை, நுரையீரல் அறுவையாளராகிய மத்தேயு சவுவீல்லி எனும் பிரான்சியரை மணந்துக்கொண்டார்.[3]
இவர் மேலைச் சமயங்களைப் பற்றி சமயப் பாராளுமன்றத் தொடரை எபான் மால்கம் சட்கிளிப்பே எனும் புனைபெயரில் எழுதினார். இவர்உலிசியாது (The Ulyssiad) (Dacosta Publishing Co., Jacksonville, 1896), எனும் உல்லிசெசு கிரேண்டின் வாழ்க்கையை கவிதையாக வடித்துள்ளார். இவர் பெண்கள் வாக்குரிமை பரப்புரையில் முனைவோடு செயல்பட்டார். மேலும், ஜாக்சன்வில்லி முதியோர் இல்லத்தில் ஏழாண்டுகள் செயல்;ஆளராக இருந்தார். இவர் அமெரிக்க பெண் எழுத்தாளரின் ஜாக்சன்வில்லிக் கிளையின் துணைத்தலைவரும் ஆவார்.[3] இவரது பதிவுரிமங்களில் மூன்று தொலைநோக்கிகளுக்கானவையும் அடங்கும்.[3] இவர் வானூர்தி வடிவமைப்பிலும் ஈடுபட்டுள்ளார்.[2]