வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | 1969 |
நிறுவனர்(கள்) | சசி ருயா ரவி ருயா |
தலைமையகம் | எஸ்ஸார் இல்லம், 11 கேசவ்ராவ் கதியே மார்கு, மகாலட்சுமி, மும்பை, இந்தியா |
முதன்மை நபர்கள் | சசி ருயா (தலைவர்) ரவி ருயா (துணைத் தலைவர்) பிரசாந்த் ருயா இயக்குநர் அன்சுமன் ருயா இயக்குநர் சுமித்தி இயக்குநர் ரேவந்த் ருயா இயக்குநர் |
தொழில்துறை | நகர்பேசித் தொலைத்தொடர்பியல் எஃகு ஆற்றல் மின்சாரம் தொடர்பியல் கப்பல் மற்றும் துறைமுகம் ஏற்பாட்டியல் கட்டுமானம் சுரங்கம் & கனிமங்கள் |
உற்பத்திகள் | எஃகு எண்ணெய் மின்சாரம் தொலைபேசி தொடர்பியல் பொறியியல் கொள்முதல் கட்டுமானம் |
வருமானம் | ▲ US$ 39 பில்லியன் (2010-11))[1] |
இணையத்தளம் | www.essar.com |
எஸ்ஸார் குழுமம், மும்பையில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள ஒரு இந்திய பன்னாட்டு பல்தொழில் நிறுவனமாகும். 1969ஆம் ஆண்டு ஒரு கட்டுமான நிறுவனமாக தொடங்கி உற்பத்தி, சேவைகள் மற்றும் சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் விரிவடைந்தது. இது தற்போது எஃகு, ஆற்றல், மின்சாரம், எண்ணெய், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் துறைமுகம், கட்டுமானம் ஆகிய துறைகளில் தொழில்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள சந்தைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் உலகெங்கும் செயல்படுகிறது.
எஸ்ஸார் சென்னை துறைமுகத்தின் ஒரு வெளி அலைதாங்கி கட்டுமான பணியின் மூலம் அதன் செயல்பாட்டை தொடங்கியது. சசி ருயா மற்றும் சகோதரர் ரவி ருயாவின் பெயரின் முதல் எழுத்தை கொண்டு நிறுவனத்துக்கு எஸ்ஸார் என பெயரிடப்பட்டது. இந்நிறுவனம் எஸ்ஸார் கட்டுமானம் நிறுவனம் என்ற பெயரில் ஜூன் 1976 இல் பதிவு செய்து கொண்டு கடல் கட்டுமானங்கள், குழாய் இடுதல், தூர்வாரல் மற்றும் பிற துறை தொடர்பான நடவடிக்கைகள் உட்பட பல முக்கிய துறை நடவடிக்கைகளில் பெரும்பான்மையாக ஈடுபட்டது. 1984 ஆம் ஆண்டில், நிறுவனம் இந்திய பொது துறை எண்ணெய் நிறுவனங்களுக்காக கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் துளையிடுவது, அது தொடர்பான முக்கிய துறைகளில் ஆய்வு மற்றும் வளர்ச்சி துறையில் மேற்கொண்டு பங்கேற்றார்கள்.பின் நிறுவனத்தின் பெயர் மே 1987 இல் எஸ்ஸார் ஆஃப்ஷோர் மற்றும் ஆய்வு லிமிடெட் என மாற்றப்பட்டது.
1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தின் பெயர், அதன் மிகவும் பன்முக தொழில் ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில் எஸ்ஸார் குஜராத் லிமிடெட் என மாற்றப்பட்டது. 1988 ஆம் ஆண்டில், நிறுவனம் மும்பை பங்கு சந்தை, இந்திய தேசிய பங்கு சந்தை மற்றும் இரண்டு இந்திய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டு அதன் பங்குகளை வெளியிட்டது.
1990ஆம் ஆண்டு எஸ்ஸார் குழுமம் அதன் குஜராத் ஹசிரா ஆலை மற்றும் விசாகப்பட்டினத்தில்லுள்ள உருண்டை ஆலை மூலம் எக்கு துறையில் நுழைந்தது. அதே தசாப்தத்தில் எஸ்ஸார் எரிவாயு ஆய்வு, எண்ணெய் சுத்திகரிப்பு, கட்டுமானம் மற்றும் ஜிஎஸ்எம் தொலைபேசி போன்ற மற்ற தொழில்களில் விரிவுபடுத்தியது.