ஏக்நாத் வசந்த் சிட்னிசு Eknath Vasant Chitnis | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | விண்வெளி அறிவியலாளர் |
அறியப்படுவது | எக்சு கதிர் வானியல் |
விருதுகள் | 1985 பத்ம பூசண் |
ஏக்நாத் வசந்த் சிட்னிசு (Eknath Vasant Chitnis) ஓர் இந்திய விண்வெளி விஞ்ஞானி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழுவின் உறுப்பினர் ஆவார். இதுவே பின்னர் இன்றைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக உருவானது. இவர் இசுரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்தியாவின் முன்னாள் சனாதிபதியான ஏபிஜே அப்துல் கலாமின் முன்னாள் சக ஊழியரும் ஆவார். இந்திய அரசு ஏக்நாத்திற்கு பத்ம பூசண் என்ற மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதை 1985 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது. [1]
தும்பா பூமத்திய ரேகை ஏவுதளத்தின் இருப்பிடத்தைத் தேர்வுசெய்ய விக்ரம் சாராபாய்க்கு ஈவி சிட்னிசு உதவி செய்தார். 1961 ஆம் ஆண்டு முதல் சிட்னிசு மேற்கொண்ட இருப்பிட வேட்டையின் விளைவாக இவ்விடம் கண்டுபிடிக்கப்பட்டது. [2] APJ அப்துல் கலாமை இந்திய விண்வெளித் திட்டத்தில் சேர்க்க சிட்னிசு பரிந்துரைத்தார் . அப்துக் கலாமின் விண்ணப்பம் மற்றும் எச்.ஜி.எசு. மூர்த்தியின் நேர்காணலுக்குப் பிறகு நாசாவின் பயிற்சிக்கும் அவரைத் தேர்ந்தெடுத்தார். [3] [4]
2008 ஆம் ஆண்டு , பிரசு டிரசுட்டு ஆஃப் இந்தியா என்ற செய்தி நிறுவனத்தின் தலைவராக ஈ.வி.சிட்னிசு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]