ஏஞ்சலா ஆர். மில்னர் (Angela Milner; 3 அக்டோபர் 1947 – 13 ஆகத்து 2021) என்பவர் இங்கிலாந்தினைச் சார்ந்த தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1986ஆம் ஆண்டில் ஆலன் சாரிக்குடன் இணைந்து டைனோசர் பேரியோனிக்சு பற்றி விவரித்தார். முனைவர் பட்டம் பெற்றுள்ள மில்னர், தற்போது இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணிபுரிகிறார். ஆர்கியொட்ரிக்சின் மூளையினை ஆய்வு செய்து, இது பறவை இனம் எனக் குறிப்பிடுவதற்கான ஆதாரங்களை வழங்கினார். இவர் தெற்கு இங்கிலாந்தில் காணப்படும் இயோசீன் காலத்திலிருந்த பறவை இனங்களையும் ஆய்வு செய்து வருகிறார்.[1]