ஏய் | |
---|---|
இயக்கம் | ஏ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | கே. பார்த்திபன் |
கதை | பட்டுக்கோட்டை பிரபாகர் (வசனம்) |
திரைக்கதை | ஏ. வெங்கடேஷ் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | சரத்குமார் நமிதா வடிவேலு கலாபவன் மணி வின்சென்ட் அசோகன் கோட்டா சீனிவாச ராவ் |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | திருவள்ளுவர் கலைக்கூடம் |
வெளியீடு | திசம்பர் 17, 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஏய் (Aai) 2004 ஆம் ஆண்டு சரத்குமார், நமீதா மற்றும் வடிவேலு நடிப்பில், ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2].
வேலு (சரத்குமார்) பழனியில் தன் தங்கையோடு மகிழ்ச்சியாக வசித்துவருகிறார். அவனது நண்பன் பழனி (வடிவேலு). வேலுவின் காதலி அஞ்சலி (நமிதா). அதே ஊரைச் சேர்ந்த ரவுடி ராகவன் (வின்சென்ட் அசோகன்), வேலுவின் தங்கைக்கு இடையூறு தருகிறான். அவனை வேலு அடித்து விடுகிறான். வேலு யார்? வேலுவின் தங்கையாக இருப்பது யார்? அவர்களின் பின்னணி என்ன? என்ற கேள்விகளோடு கடந்தகாலக் கதை காட்சிகளாக விரிகிறது.
ராணுவத்திலிருந்து திரும்பும் வேலு சென்னையில் காவல்துறையில் பணிபுரியும் அவனது நண்பன் முருகனின் (கலாபவன் மணி) வீட்டுக்கு வருகிறான். வேலுவின் தங்கையாக இருப்பது முருகனின் உடன்பிறந்த தங்கையாவாள். பெற்றோர்கள் இல்லாத தன் தங்கையை மிகுந்த அன்போடு வளர்த்துவருபவன் முருகன். ராணுவத்திலிருந்து திரும்பிய வேலு சில காவல் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்படுகிறான். எனவே தங்களைச் சுற்றி நடக்கும் குற்றங்களுக்குக் காரணமானவர்களை அவர்கள் காவல்துறையினராக இருந்தாலும் மாறுவேடத்தில் சென்று வேலுவும், முருகனும் தண்டிக்கின்றனர். இந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் அவர்களால் பாதிக்கப்பட்ட நாச்சியார் (கோட்டா சீனிவாச ராவ்) முருகனைக் கொன்றுவிடுகிறான். முருகனின் தங்கையைத் தன் தங்கையாக ஏற்றுக்கொண்டு நாச்சியாரிடமிருந்து தப்பி தலைமறைவாக பழனியில் இருவரும் வசித்துவருகின்றனர். அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறியும் அவர்களது எதிரிகள் பழனிக்கு வருகின்றனர்.
இறுதியில் வென்றது வேலுவா? அவன் எதிரிகளா? என்பதே முடிவு.
படத்தின் இசையமைப்பாளர் சிறீகாந்த் தேவா. பாடல் வெளியீடு டிவோ[3].
வ. எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|---|
1 | அர்ஜுனா அர்ஜுனா | கலைக்குமார் | உதித் நாராயணன், மதுஸ்ரீ | 5:13 |
2 | ஊரு ஒன்னு ஒன்னு | வாலி | சரத்குமார், வடிவேலு, அனுராதா ஸ்ரீராம், பரவை முனியம்மா, ஜெய்ஸ்ரீ | 5:27 |
3 | ஏய் மைலாப்பூரூ | பா. விஜய் | மாணிக்க விநாயகம், சபேஷ்,கங்கா , சாதனா சர்கம் | 5:18 |
4 | மேயா மேயா | கலைக்குமார் | ஸ்ரீகாந்த் தேவா, சாதனா சர்கம் | 5:18 |
5 | நெத்தி அடிடா | வாலி | ஜாவித் அலி, ஸ்ரீராம், கோபால் சர்மா, குமார் | 5:03 |
6 | வெளுத்து கட்டு | வாலி | சங்கர் மகாதேவன் | 5:50 |
தயாரிப்பாளரின் நிதி நெருக்கடி காரணமாக 4 மாதங்கள் தாமதமாக படம் வெளியானது[4].
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)