ஏழாம் சாமராச உடையார் | |
---|---|
மைசூர் மன்னர் | |
ஆட்சி | 1732 - 1734 |
முடிசூட்டு விழா | 19 மார்ச் 1732 |
அரச குலம் | உடையார் வம்சம் |
தந்தை | தேவராச அர்ஸ் |
பிறப்பு | Chamaiya Hadidentu Tingal 1704 |
இறப்பு | 1734 கபாலதுர்கா |
சமயம் | இந்து |
மகாராசா சிறீ சாமராச உடையார் (1704 - 1734) அல்லதுஏழாம் சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1732 முதல் 1734 வரை இருந்தவர்.[1]மன்னர் தொட்ட கிருட்டிணராசன் இறந்தபோது தேவராசன் என்பவர் தளவாய் ஆகவும் நஞ்சராசன் என்பவர் முதலமைச்சராகவும் இருந்தனர். ஆட்சியில் இவர்கள் ஆதிக்கமே இருந்தது.
இவர் அங்கனஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்த தேவராச அர்ஸ் என்பவரின் மகனாவார். இவர் சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா என்னும் தேவராச அம்மணிக்கும் மறைந்த மன்னர் தொட்ட கிருட்டிணராச உடையாருக்கும் வளர்ப்பு மகனாவார். 19 மார்ச் 1732இல் இவரை சாமராச உடையார் என்ற பெயருடன் அமைச்சர்கள் பட்டம் சூட்டினர். புதிய மன்னர் தன் அதிகாரத்தைக் காட்டவே மன்னரை சிறையில் அடைத்தனர். இவர் 1734 இல் சிறையிலேயே மாண்டார். அமைச்சர்கள் சேர்ந்து ஐந்து வயதான ஒரு சிறுவனுக்கு பட்டம் சூட்டினர். [2]