ஆ. கு. சு. விஜயன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | நாகப்பட்டிணம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 15, 1961 சித்தமல்லி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | தி.மு.க |
துணைவர் | ஜோதி |
வாழிடம் | சித்தமல்லி |
As of மே 22, 2013 மூலம்: [1] |
ஆ. கு. சு. விஜயன் (ஆங்கிலம்: A.K.S. Vijayan) (பிறப்பு 15 டிசம்பர், 1961) இந்தியாவின் நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று மக்களவையில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[1] நாகப்பட்டிணம் மாவட்ட தி.மு.க செயலாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது திமுகவின் விவசாய அணி செயலாளராக உள்ள இவர்,[2] 14.06.2021 அன்று, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்பதவியில் ஓராண்டு காலத்திற்கு நீடிப்பார்.[3] இவரது தந்தை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைச் சார்ந்த ஆ. கு. சுப்பையா ஆவார். இவர் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)