மராக் | |
மாற்றுப் பெயர்கள் | இறைச்சி வடிசாறு |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | தெலிங்காணா |
முக்கிய சேர்பொருட்கள் | இறைச்சி மற்றும் எலும்பு, இந்திய மசாலா |
ஐதராபாத்து மராக் அல்லது மராக் என்பது ஒரு காரமான இறைச்சி வடிசாறு (soup) ஆகும். இது இந்தியாவின் ஐதராபாத்து நகரத்தில் புழங்கும் ஐதராபாத்து சமையலின் ஒரு பகுதியாகப் பரிமாறப்படுகிறது. இது எலும்புடன் மென்மையான ஆட்டிறைச்சியிலிருந்து சமைக்கப்படுகிறது. இந்த சுவையான வடிசாறு, [1] ஐதராபாத்து திருமண விருந்துகளில், தொடக்க பானமாக பரிமாறப்படுவது வழக்கமாகிவிட்டது.
உள்ளூரில் கிடைக்கும் ஆட்டிறைச்சி மற்றும் எலும்பு, வெங்காயம், முந்திரி, தயிர், தேங்காய்த் துருவல், காய்ச்சிய பால், கிரீம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, கருப்பு மிளகு தூள், பச்சை மிளகாய் ஆகியன ஆகும் .