நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Sagittarius |
வல எழுச்சிக் கோணம் | 18h 05m 16.35s[1] |
நடுவரை விலக்கம் | –28° 53′ 42.0″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 19.7 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K5[1] |
வான்பொருளியக்க அளவியல் | |
தூரம் | ~19000 ஒஆ (~5800 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.63 ±0.08 M☉ |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
ஒஈவிசெ-2003-பிஎல்ஜி-235எல் ( வாநுநோ-2003-பிஎல்ஜி-53L ) (OGLE-2003-BLG-235L) (MOA-2003-BLG-53L)என்பது சிலை(வில்) ராசியில் உள்ள ஒரு விண்மீனாகும். இந்த விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கோள் முதலில் ஒளியியல் ஈர்ப்பு வில்லைச் செய்முறையால் கண்டறியப்பட்ட கோளாகும். இந்த நிகழ்வு 2003 ஜூலையில் நடந்தது. இரண்டு குழுக்கள் இந்த நிகழ்வை ஒளியியல் ஈர்ப்பு வில்லைச் செய்முறை (ஒஈவிசெ), வானியற்பியலில் நுண்வில்லையாக்க நோக்கீடுகள் (வாநுநோ) வழி, கண்காணித்து தற்சார்பாக தனியாகக் கண்டறிந்தன: எனவே, இதற்கு இரட்டை பெயரீடு வழங்கப்பட்டது. இது K வகை ஆரஞ்சு குறுமீனாகும், இதை ஒரு பெரிய கோள் சுற்றிவருகிறது.[2]
ஒஈவிசெ-2003-பிஎல்ஜி-235எல் மற்றும் வாநுநோ-2003-பிஎல்ஜி-53எல் என்பது வில்லை அமைப்பால் விண்மீனுக்கு வழங்கப்படும் பெயரீடாகும்.[3] 2004 ஆம் ஆண்டில், தாய் விண்மீனின்ன் முன் கடந்து செல்லும் போது உருவான ஒளி வளைவின் பகுப்பாய்வு, ஓம்பல் விண்மீனை விட விட 0.0039 மடங்கு பொருண்மை கொண்ட ஒரு புறக்கோள் விண்மீனைச் சுற்றி வருவதைக் கண்டறிய வழிவகுத்தது (இது வியாழன் பொருண்மை வரம்பில் வைக்கும்). விண்மீன் மண்டலத்தில் மிகவும் பொதுவான வகை விண்மீன் என்பதால், இந்த விண்மீன் முதலில் செங்குறுமீனாகக் கருதப்பட்டது.
2006 வாக்கில், வாயிலும் வில்லை விண்மீனும் அவற்றின் ஒளியைப் பிரிக்கக்கூடிய அளவுக்கு (பூமியிலிருந்து பார்க்கும்போது) நெடுந்தொலைவுக்குல் நகர்ந்தது. அபுள் விண்வெளி தொலைநோக்கியின் நோக்கீடுகள், உண்மையில் விண்மீன் எதிர்பார்த்ததை விட பொலிவாகவும் குறைவான செந்நிறத்துடனும் இருந்தது. இது சுமார் 0.63 சூரியப் பொருண்மை கொண்ட K குறுமீனுக்கு எதிர்பார்க்கப்படும் கதிர்நிரல்வகையுடன் பொருந்துகிறது, இது பால்வெளியில் உள்ள சராசரி விண்மீனைவிட விட பெரியது. இது வில்லை விண்மீனுக்கான தொலைவை மதிப்பிட உதவுகிறது, இது 5.8 கிலோபுடைநொடிகள் (19,000 ஒளி ஆண்டுகள்) தொலைவில் உள்ளது.[4]
OGLE-2003-BLG-235L/MOA-2003-BLG-53L அமைப்பு கண்டுபிடிப்புக் குழு பின்தொடர்தல், உறுதிப்படுத்தல் நோக்கீடுகளால் ஒரு கோளைக் கன்டறிந்தது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 2.6+0.8 −0.6 MJ |
4.3+2.5 −0.8 |
? | ? |