ஒட்டக்கூத்தர்

கவிச்சக்கரவத்தி
ஒட்டக்கூத்தர்
பிறப்புதிருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி
தொழில்கவிஞர்
தேசியம்சோழர்
இலக்கிய இயக்கம்சைவ சமயம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தக்கயாகப் பரணி

ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன.[1]

பிறப்பு

[தொகு]

இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி (இன்றைய திருவெறும்பூரில்) என்னும் ஊரில் செங்குந்த கைக்கோளர் குலத்தில் பிறந்தார்.

கூத்தர்' முதலியார் என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.[2][3]

வரலாறு

[தொகு]

நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் கம்பரின் பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. காஞ்சிபுரத்தில் இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல். குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவரும் புகழேந்திப் புலவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடல்கள் சுவை மிக்கவை.

இவர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.[4] இவரது காலத்துக்குச் சுமார் 500 ஆண்டுகள் பின்னர் பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் தனி நூலாக இல்லை.

பூந்தோட்டம் ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.[5]

இவர் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், சக்கரவர்த்தி, காளக்கவி, கௌடப் புலவர், சருவஞ்ஞன கவி இன்ன பல பட்டங்களைப் பெற்றார் இதில் கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டம் ஒட்டக்கூத்தர், கம்பர், சயங்கொண்டார் என மூன்று பேருக்கு மட்டுமே உள்ளது.[6]

ஒட்டக்கூத்தர் ஜீவசமாதி கும்பகோணம் தாராசுரம் அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

ஒட்டக்கூத்தரின் நூல்கள்

[தொகு]

இவையன்றி கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்

[தொகு]
  • ' ஓட்டக்கூத்தரின் ஈட்டியெழுப்பது ' புலவர் பெ.வேலு, 1981 தமிழ்ச்சங்கம் தாரமங்கலம் சேலம், பக். 1-84.
  • புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர், புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149
  • நான் கண்ட ஒட்டக்கூத்தர், சிறீநிவாச ரங்கசுவாமி, நாம் தமிழர் பதிப்பகம், 2004, ப்க்.1-90.

சரஸ்வதி கோயில்

[தொகு]

கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் ஒட்டக்கூத்தர் வழிபட்டு அம்பாள் அருள் பெற்றுள்ளார்.[7]

வெளி இணைப்புகள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. முனைவர் சி. பாலசுப்பிரமணியன். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர். p. 5 - 10.
  2. ஒட்டக்கூத்தர் அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது, அதில் லரும் ஒரு பாடலை ஒட்டி மற்றொரு பாடலைப் பாடுமாறு விக்கிரம சோழன் கேட்டதாகவும், ஒட்டக்கூத்தர் சோழன் விருப்பப்படி ஒட்டிப் பாடியதால் ‘ஒட்டக்கூத்தர்’ என்னும் பெயரைப் பெற்றார் என்னும் செய்தியும் கூறப்படுகிறது. - *மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
  3. முனைவர் சி. பாலசுப்பிரமணியன். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர். p. 12.
  4. http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202152.htm
  5. http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=14268 பரணிடப்பட்டது 2012-11-03 at the வந்தவழி இயந்திரம் கலைமகள் போற்றுதும்
  6. முனைவர் சி. பாலசுப்பிரமணியன். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர். p. 14.
  7. அருள்மிகு மகாசரஸ்வதியம்மன் திருக்கோயில், மகாமகம் சிறப்பு மலர் 2004