ஒட்டி வளர்தல் (Adnation) பூக்கும் தாவரங்களின் ஒரு பூவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வட்ட அடுக்குகளின் கூட்டிணைவைக் குறிக்கும். ஒட்டிணைவு என்ற சொல்லாலும் இதை குறிப்பிடலாம். ஆண் இணை உறுப்புடன் அல்லிவட்டம் இணைந்திருப்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.[1] ஒற்றை வட்ட அடுக்கிற்குள்ளேயே இணையொத்த உறுப்புகள் பிறப்பிலேயே ஒட்டிக்கொண்டிருத்தல் என்ற இயல்புக்கு இது முரணானதாகும்.[2][3]