ஒல்ஜெயி தெமூர் கான் 完者帖木兒汗 ᠥᠯᠵᠡᠶᠢᠲᠡᠮᠦᠷ ᠬᠠᠭᠠᠨ | |||||
---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் ககான் | |||||
வடக்கு யுவான் அரசமரபின் ககான் | |||||
ஆட்சி | 1408–1412 | ||||
முடிசூட்டு விழா | 1408 | ||||
முன்னிருந்தவர் | ஒருக் தெமூர் கான் | ||||
பின்வந்தவர் | தெல்பெக் கான் | ||||
| |||||
மரபு | போர்சிசின் | ||||
அரச குலம் | வடக்கு யுவான் அரசமரபு | ||||
தந்தை | எல்பெக் நிகுலேசுக்சி கான் | ||||
பிறப்பு | 1379 வெளி மங்கோலியா | ||||
இறப்பு | 1412 (அகவை 32–33) வெளி மங்கோலியா | ||||
சமயம் | சுன்னி இசுலாம் |
ஒல்ஜெயி தெமூர் கான் (மொங்கோலியம்: Өлзийтөмөр хаан ᠥᠯᠵᠡᠶᠢᠲᠡᠮᠦᠷ; மரபுவழிச் சீனம்: 完者帖木兒汗) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவரது இயற்பெயர் புண்ணியசிறீ (சீனம்: 本雅失里, சமக்கிருதம்: प्रज्ञाश्री), (1379–1412) ஆகும். இவர் 1408 - 1412இல் ஆட்சி புரிந்தார். இவர் எல்பெக் நிகுலேசுக்சி கானின் மகன் ஆவார். குண் தெமூர் கானின் இறப்பிற்குப் பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார். தைமூரால் அரியணையைக் கைப்பற்றுவதற்கு ஆதரவளிக்கப்பட்ட தோக்தமிசு மற்றும் தெமூர் குத்லுக் போன்ற போர்சிசின் இளவரசர்களில் இவரும் ஒருவராவார்.
திசகான் செச்செனின் கூற்றுப்படி, புண்ணியசிறீ 1379இல் பிறந்தார்.[1] இவரது பிறப்புக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது தந்தை எல்பெக்கை பகாமு மற்றும் குலிச்சி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட ஒயிரட்களால் கொல்லப்பட்டார். 1402இல் ஒருக் தெமூர் கான் அல்லது குலிச்சியால் மகுடத்துக்கான போட்டியில் குண் தெமூர் கான் கொல்லப்பட்டார்.