அசாம் கசிரங்கா பல்கலைக்கழகம்[1][2][3] [4][5] (கசிரங்கா பல்கலைக்கழகம் என்றும் அறியப்படும்), இந்திய மாநிலமான அசாமில் உள்ள தனியார் பல்கலைக்கழகம்.[6] இது அசாமின் யோர்ஹாட் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல், மேலாண்மை, கணினியியல் ஆகிய துறைகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் இளநிலை, முதுநிலை ஆகிய பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம்.
இந்த பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.[4][7][8] இதன் மூலம் இரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த பல்கலைக்கழகம் கார்டிப் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்துடனும் புர்ந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.[9][10][11][12][13] இதனால் ஆராய்ச்சிகளை கூட்டு சேர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும். மேலும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தோடும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, எம்.பி.ஏ மாணவர்களை ஒரு மாத காலம் அனுப்பி வைக்கிறது.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)