கடற்செவ்வந்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicots
|
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Asterales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Asteroideae
|
சிற்றினம்: | Heliantheae
|
பேரினம்: | Melanthera
|
இனம்: | M. biflora
|
இருசொற் பெயரீடு | |
Melanthera biflora (L.) Wild. | |
வேறு பெயர்கள் | |
|
மெலான்தீரா பைஃபுளோரா (Melanthera biflora,[4] என்னும் தாவரம் கடல் டெய்சி என்றும் கடற்கரை டெய்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். இது பரவலாகவும் விரைவாகவும் வளரும் தாவரமாகும்.
இத்தாவரம் உப்புத் தன்மையை தாங்கி வளரும். சீனா, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா, குயின்ஸ்லாந்து, பசிபிக் தீவுகளான பிஜி, நியுவே, தொங்கா, சமோவா, குக் தீவுகள் உள்ளிட்ட இந்தோ-பசிபிக் வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகிறது. இத்தாவரம் பெரும்பாலும் தீவின் கடலோரப்பகுதிகளிலும் அரிதாக உள்நிலை பகுதிகளிலும் காணப்படுகிறது.[5]
இத்தாவரம் கடினமான தண்டுடைய பல்லாண்டு சிறு செடி அல்லது புதர் செடி ஆகும். இது கிளைகளுடன் கூடிய நீண்ட தளைப்பகுதி கொண்டது. 2 மீட்டர் நீளம் வரை சென்றபின் வளையும் தன்மை உடையது. இது மற்ற தாவரங்களில் மீது படர்ந்து வளரும். இதன் இலைக்காம்பு குறுகியதாகவும் இலைப்பரப்பு முட்டை வழவத்திலும் இருக்கும் இது மஞ்சள் நிற சிறிய மலர்களை உடையது. அடர்த்தியான கொத்தான பழங்களை உடையது.[6]
இதன் இலைகள் உண்ணத்தக்கவை.[7] மலேசியாவில் இதன் தண்டுப்பகுதி உண்ணப்படுகிறது. இலைச்சாரின் வடி நீர் பாரம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இதன் இலைகள் வயிற்று வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மலர்களும் மருத்துவ குணம் கொண்டது. இத்தாவரம் முயலுக்கு தீவனமாக பயன்படுகிறது.[8][9]