கட்டோ (Kato; பஞ்சாபி மொழி: ਕਾਟੋ), காடோ அல்லது கேட்டோ என்றும் உச்சரிக்கப்படும், இது பஞ்சாபின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றாகும்.[1] [2] இது பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளில் குறிப்பாக பாங்க்ரா, மல்வாய் கித்தா போன்ற நாட்டுப்புற நடனங்களில் பயன்படுத்தப்படுகிறது.[3] கட்டோ என்பது பஞ்சாபியில் அணில் என்று பொருள்படும்.[4] மேலும் இதன் வடிவமைப்பிற்கு அணிலைப் போலவே இருப்பதால் இப்பெயரிடப்பட்டது,.மேலும் இக்கருவி மகிழ்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.[5] பஞ்சாபில், மகிழ்ச்சியான மனிதனிடம் அவன் எப்படி இருக்கிறான் என்று கேட்டால்? அவர் பதிலளித்தார், அவரின் பதில் "அஜ்ஜ் தான் காடோ புல்லன் தே ஆ", என்பதாக இருக்கும். தோராயமாக பூக்கள் மீது அணில் இருப்பதை போன்றே அவரது மனநிலை இருப்பதாக புரிந்துகொள்ளலாம்.[3]
அணிலின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கருவி முழுவதும் மரத்தால் ஆனது. ஒரு முனையில் (அணில் உருவத்தின் வாய்ப்பகுதியில்) ஒரு குச்சியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு அதன் மறுமுனை (அணில் உருவத்தின் வால் பகுதியில்) வரை இணைத்து பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டக்காரர் குச்சியின் மறுமுனையைப் பிடித்து அணிலின் வாயிலும் வாலிலும் கட்டப்பட்ட கயிறுகளை இழுப்பதன் மூலம் வெவ்வேறு தாளங்களில் இசையை ஏற்படுத்தலாம்.[1][2][5][4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)