கணபதிராவ் விருமன்

கணபதிராவ் விருமன்
Yang Berbahagia
YB Tuan Ganabatirau Veraman
சிலாங்கூர் கிள்ளான் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 நவம்பர் 2022
முன்னையவர்சார்லசு சந்தியாகோ
(பாக்காத்தான் ஜசெக)
பெரும்பான்மை91,801 (2022)
சிலாங்கூர் மாநில அமைச்சர்
தோட்டத் தொழிலாளர்கள், வறுமை
மற்றும் பரிவு அரசு துறை
பதவியில்
2013–2018
தேசிய விளம்பர உதவிச் செயலாளர்
ஜனநாயக செயல் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மார்ச் 2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சூன் 1973 (1973-06-06) (அகவை 51)
தெலுக் இந்தான், பேராக், மலேசியா
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிஜனநாயக செயல் கட்சி (DAP)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் அரப்பான் (PH)
பாக்காத்தான் ராக்யாட் (PR)
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

கணபதிராவ் விருமன் (ஆங்கிலம்: Ganabatirau s/o Veraman; மலாய்: Ganabatirau Veraman; சீனம்: 假名巴蒂勞) (பிறப்பு: 6 சூன் 1973) என்பவர் 2022 நவம்பர் மாதத்தில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தின் கிள்ளான் தொகுதியின் (Klang Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்து வரும் மலேசிய அரசியல்வாதி ஆகும்.

இண்ட்ராப் இந்து உரிமைகள் போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவரான கணபதிராவ் விருமன், மலேசிய உளநாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்; கமுந்திங் தடுப்பு மையத்தில் 23 நவம்பர் 2007 தொடங்கி 5 ஏப்ரல் 2009 வரை 499 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.[1][2][3]

பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) மற்றும் பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) கூட்டணிகள்; சிலாங்கூர் மாநிலத்தை நிர்வாகம் செய்யும் போது, கணபதிராவ் விருமன் அந்த நிர்வாகங்களில் சிலாங்கூர் மாநில செயற்குழு (EXCO) உறுப்பினராகப் பொறுப்பில் இருந்தார். மலேசியாவின் மாநில அமைச்சர்களை மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் (State Executive Councillor) (EXCO) என்று அழைக்கின்றனர்.

பொது

[தொகு]

பாக்காத்தான் (Pakatan Harapan) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியைச் (Democratic Action Party) சார்ந்த இவர்; மே 2018 முதல் சிலாங்கூர் மாநில சட்டமன்ற கோத்தா கெமுனிங் மாநிலத் தொகுதியின் (Kota Kemuning State Constituency) சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

அதற்கு முன்னர் சிலாங்கூர் மாநில சட்டமன்ற தொகுதியான கோத்தா ஆலாம் சா தொகுதியில் மே 2013 முதல் மே 2018 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் சேவை செய்து உள்ளார். அத்துடன் மார்ச் 2022 முதல் ஜனநாயக செயல் கட்சியின் உதவி தேசிய விளம்பரச் செயலாளராகவும் (Assistant National Publicity Secretary) பணியாற்றினார்.[4] தற்சமயம் ஜனநாயக செயல் கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.[5][6]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

பேராக் தெலுக் இந்தான் பகுதியில் பிறந்து வளர்ந்த கணபதிராவ், பள்ளியில் சிறந்து விளங்கினார். படிப்படியாகக் கல்வித் துறையில் முன்னேற்றம் கண்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். சமூகச் சேவைகளில் ஈடுபட்டு வந்த அவர், காலப் போக்கில் அரசியலில் தடம் பதித்தார்.

கணபதிராவின் அரசியல் வாழ்க்கை அவரின் இளமை பருவத்தில் தொடங்கியது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தம் தாத்தாவின் சுவடுகளைப் பின்பற்றி மலேசியாவில் ஓர் உரிமைப் போராட்ட வீரராகத் (Freedom Fighter of Malaysia) திகழ்ந்தவர். அரசு சாரா நிறுவனங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர்; மற்றும் பல இனங்கள் வாழும் மலேசியாவில் மனித உரிமைகள் மற்றும் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வந்தார்.

இந்து உரிமைகள் போராட்டக் குழு

[தொகு]

2006 ஏப்ரல் - மே மாதங்களுக்கு இடையில், மலேசியாவில் பல இந்துக் கோயில்கள் அரசு அதிகாரிகளால் இடிக்கப்பட்டன. 21 ஏப்ரல் 2006-இல், கோலாலம்பூர் மாநகராட்சி, கோலாலம்பூரில் உள்ள மலைமேல் சிறீ செல்வ காளியம்மன் கோயிலுக்கு (Malaimel Sri Selva Kaliamman Temple) மண் தள்ளும் நிலச்சமனிகளை அனுப்பி கோயிலை இடித்துத் தள்ளியது.[7][8]

இந்த நிகழ்வுக்குப் பின்னர், கணபதிராவ் அவர்களும் மற்றும் அரசு சாரா முப்பது இந்து அமைப்புகளும் இண்ட்ராப் (Hindu Rights Action Force) என்ற பெயரில் ஒன்றிணைந்தன். இண்ட்ராப் அமைப்புடன் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து, கோயில் இடிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மலேசியப் பிரதமரிடம் புகார்கள் அளித்தன. ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.[9][10]

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்

[தொகு]

இண்ட்ராப் அமைப்பில் கணபதிராவுடன் வேதமூர்த்தி பொன்னுசாமி (Waytha Moorthy Ponnusamy), எம். மனோகரன் (Manoharan Malayaram) மற்றும் உதயகுமார் பொன்னுசாமி (Uthayakumar Ponnusamy) ஆகியோர் மேலாதிக்கத் தலைவர்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மலேசிய இந்து மத உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க மலேசியா முழுவதும் அமைதியான வகையில் மனித உரிமை சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடுகள் செய்தனர். 2007 நவம்பர் 23-ஆம் தேதி, கணபதிராவ், வேதமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் 1960 (Internal Security Act 1960) தேச நிந்தனையின் கீழ் (Sedition Act) கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டனர். கமுந்திங் தடுப்பு மையத்தில் (Kamunting Detention Centre) தடுத்து வைக்கப்பட்டனர்.[2]

கமுந்திங் தடுப்பு மையம், பேராக் தைப்பிங் நகருக்கு அருகில் கமுந்திங் எனும் புறநகர்ப் பகுதியில் அமைந்து உள்ளது. இந்தத் தடுப்பு மையத்தை மலேசியாவின் குவாந்தானாமோ எனும் அடைமொழியுடன் அழைப்பதும் உண்டு. கியூபாவில், அமெரிக்காவின் கண்காணிப்பில் இருக்கும் குவாந்தானாமோ சிறைச்சாலையை ஒப்பிட்டு, இந்த முகாமை அவ்வாறு அழைக்கின்றனர்.[3]

இன வெறுப்பைத் தூண்டியதாக குற்றச்சாட்டு

[தொகு]




2022-இல் கிள்ளான் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்

  மலாயர் (26.44%)
  சீனர் (55.26%)
  இதர இனத்தவர் (1.22%)

இருப்பினும் இண்ட்ராப் தலைவர்கள் இன வெறுப்பைத் தூண்டியதாக அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை. இண்ட்ராப் தலைவர்களுக்கு எதிரான ஒரே சான்று, அவர்களின் தமிழ் பேச்சுகளின் மொழி பெயர்ப்புகள் மட்டுமே. அவற்றை அரசு தலைமை வழக்கறிஞர் குழு (Attorney-General's Chambers) நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. எனினும் அந்த மொழிபெயர்ப்புகளில் உறுதித் தன்மை இல்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது.[11]

இறுதியில், இண்ட்ராப் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் 5 ஏப்ரல் 2009-இல் விடுவிக்கப்பட்டனர். கமுந்திங் தடுப்பு மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறிது காலத்தில் கணபதிராவ் ஜனநாயக செயல் கட்சியில் சேர்க்கப்பட்டார். அவர் தன் சொந்த சட்ட நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, சா ஆலாம் மாநகராட்சியின் (Shah Alam City Council) மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மற்றும் சா ஆலாம் உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனநாயக செயல் கட்சிக்கு உதவினார்.

2013 பொதுத் தேர்தலில் கணபதிராவ் முதன்முறையாகப் போட்டியிட்டார். சிலாங்கூர் மாநிலத் தொகுதியான கோத்தா ஆலாம் சா தொகுதியில் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறார். பின்னர் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் (EXCO of Selangor State Government) ஒருவராக (மாநில அமைச்சர்) பதவி உயர்வு பெற்றார்.

2022 பொதுத் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசிய நாடாளுமன்றம்: 2022 தேர்தல் முடிவு
கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி (P110), சிலாங்கூர்[12][13][14][15][16]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்கு % போட்டியாளர் வாக்கு % மொத்த
வாக்கு
பெரும்
பான்மை
வாக்கு
பதிவு
2022 P110 கிள்ளான் தொகுதி, சிலாங்கூர் கணபதிராவ் விருமன் (ஜசெக) 115,539 70.49% செயசந்திரன் பெருமாள்
(Jaya Chandran Perumal) (பெர்சத்து)
23,738 14.48% 165,554 91,801 78.46%
தீ ஊய் லிங்
(Tee Hooi Ling) (மசீச)
19,762 12.06%
எட்ரின் ராம்லி
(Hedrhin Ramli) (சுயேச்சை)
3,016 1.84%
லூ செங் வீ
(Loo Cheng Wee) (வாரிசான்)
1,140 0.70%
தீபக் செய்கிசன்
(Deepak Jaikishan) (சுயேச்சை)
439 0.27%
சந்திரா சிவராசன்
(Chandra Sivarajan) (மலேசிய
மக்கள்
கட்சி
)
271 0.17%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Five Hindraf leaders detained under ISA". The Star Online. 13 December 2007. https://www.thestar.com.my/news/nation/2018/09/08/waytha-moorthy-launches-indian-party/. 
  2. 2.0 2.1 Tsin, Soon Li (26 November 2007). "Hindraf trio discharged from sedition". Malaysiakini. http://www.malaysiakini.com/news/75273. 
  3. 3.0 3.1 "Police arrest Malaysian activist". Al Jazeera. 29 November 2007. https://www.aljazeera.com/news/2007/11/29/police-arrest-malaysian-activist. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-06. பார்க்கப்பட்ட நாள் 2023-04-23.
  5. "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 19 April 2013.
  6. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE - 14". Election Commission of Malaysia. Archived from the original on 12 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018.
  7. Temple row - a dab of sensibility please, malaysiakini.com
  8. "Hindu temple brought down in Malaysia". 2 November 2007. https://timesofindia.indiatimes.com/world/rest-of-world/hindu-temple-brought-down-in-malaysia/articleshow/2511694.cms. 
  9. "Malaysia demolishes century-old Hindu temple". 21 April 2006. https://www.dnaindia.com/world/report-malaysia-demolishes-century-old-hindu-temple-1025317. 
  10. Muslims Destroy Century-Old Hindu Temple பரணிடப்பட்டது 4 நவம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம்
  11. "Lawyers charged with sedition". Malaysia Star. 24 November 2007. http://thestar.com.my/news/story.asp?file=/2007/11/24/nation/19567875&sec=nation. 
  12. "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 27 May 2010. Percentage figures based on total turnout.
  13. "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 19 April 2013. Results only available from the 2004 Malaysian general election (GE11).
  14. "KEPUTUSAN PILIHAN RAYA UMUM 13". Sistem Pengurusan Maklumat Pilihan Raya Umum. Election Commission of Malaysia]]. Archived from the original on 14 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)Results only available for the 2013 Malaysian general election|2013 election.
  15. "SEMAKAN KEPUTUSAN PILIHAN RAYA UMUM KE - 14". Election Commission of Malaysia. Archived from the original on 12 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 17 May 2018. Percentage figures based on total turnout.
  16. "The Star Online GE14". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 24 May 2018. Percentage figures based on total turnout.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]