வை. கணபதி ஸ்தபதி | |
---|---|
பிறப்பு | 30 செப்டம்பர் 1927 பிள்ளையார்பட்டி, காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் |
இறப்பு | 5 செப்டம்பர் 2011 (வயது 84)[1] சென்னை |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | கோவில் கட்டுநர், சிற்பி, எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோயில் கட்டிடக் கலைஞர் மற்றும் சிற்பி |
அரசியல் இயக்கம் | வாஸ்து வேத ஆய்வு அறக்கட்டளை |
விருதுகள் | பத்ம பூசண் |
வை. கணபதி (ⓘ) (செப்டம்பர் 30, 1927 - செப்டம்பர் 5, 2011) புகழ் பெற்ற சிற்பி ஆவார். இவர் கணபதி ஸ்தபதி என்று பலரால் அறியப்படுகிறார். பத்மபூஷன் விருது பெற்ற இவர் புகழ் பெற்ற கட்டடங்களையும் சிலைகளையும் வடிவமைத்தவர்.[2]
1927ம் ஆண்டு வைத்தியநாத சிற்பிக்கும் வேலம்மாளுக்கும் பிள்ளையார்பட்டியில் பிறந்தார். இவர்கள் குடும்பம் [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சிற்பியான குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சனின் வழிவந்தவர்கள் என கருதப்படுகிறது.[3] இவர் காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் கல்லூரியில் கணிதத்தில் தேர்ச்சி பெற்றார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் 1957ல் இவர் பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோயில் இந்து சமய அறநிலை வாரியத்தில் சிற்பியாக பணியில் சேர்ந்தார். இவரின் தந்தை 1960ல் மறையும் வரை அங்கேயே பணிபுரிந்தார். தந்தையின் மறைவுக்கு பின் அப்பணியை துறந்துவிட்டு 1957-1960 வரை தன் தந்தை முதல்வராக பணிபுரிந்த மாமல்லபுர அரசு கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.[4] 27 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார்.
உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் 2011-ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.[5]
இவர் பல்வேறு கோயில்கள் மற்றும் சிலைகளை வடிவமைத்துள்ளார். சில மிகவும் புகழ்பெற்றவை.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)