கண்டசாலா பாலராமையா | |
---|---|
பிறப்பு | ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி |
|
உறவினர்கள் | தமன் |
கண்டசாலா பாலராமையா தெலுங்குத் திரைப் படங்களில் பணியாற்றிய இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும மற்றும் நடிகரும் ஆவார். இவரது குறிப்பிடத்தக்க படங்களில் சீதா ராம ஜனனம் (1944) பாலராஜு (1948) ஸ்வப்னா சுந்தரி (1950) மற்றும் ஸ்ரீ லட்சுமம்மா கதா (1950) ஆகியவை அடங்கும். 1944 ஆம் ஆண்டு வெளியான சீதா ராம ஜனனம் என்ற புராணத் திரைப்படத்தில் அக்கினேனி ராவை முதல் கதாநாயகனாக நடிக்க வைத்ததற்காக பாலராமையா அறியப்படுகிறார்.[1][2]
கண்டசாலா பாலராமையா 1906 ஆம் ஆண்டில் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பொட்டேபாலத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஒரு மேடைப் பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் திரைப் படங்களைத் தயாரிக்கவும் இயக்கவும் தொடங்கினார். இசையமைப்பாளர் தமன் இவரது பேரன் ஆவார்.[3]